பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி f 83

இணங்கவில்லை. 'காய்ச்சல் உடம்போடு தலைக்குத் தண்ணீர் விட்டுக் கொள்ளுமுன் உன்னை இவ்வளவு தூரம் இழுத்துக் கொண்டு வந்தது போதாதா? என் தலை விதி; எனக்குப் பெண்ணாய்ப் பிறந்தவள் இப்படிப் புத்திகெட்டுப் போனால் அதற்கு நீங்களெல்லாம் என்ன செய்வீர்கள்; இன்னும் இது போதாதென்று உன் வீட்டில் வேறு வந்து உன் தலையில் என் கவலையையும் சுமக்க வைக்க வேண்டுமென்கிறாயா? என்னைப் பற்றி உனக்குப் பயமே வேண்டாம் பூரணி, இந்த அசட்டுப் பெண்ணுக்காக இசகு பிசகாக நான் எதுவும் செய்து கொண்டு விடமாட்டேன். அன்றொரு நாள் நீ என்னை முதன் முதலாகச் சந்தித்த போது பெண்கள் மாறுபட்ட சூழ்நிலைகளிலும் பழகி இன்றைய நவீன நாகரிகங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி வாதாடினேன். நீ ஒப்புக்கொள்ளவில்லை. அந்தக் கருத்தைக் கடைசிவரை வன்மையாக மறுத்தாய். அதன் உண்மை, இன்று எனக்குப் புரிகிறது பூரணி."

'பழைய கதையை எல்லாம் எதற்கம்மா இப்போது கிளப்பு கிறீர்கள்? நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம். உங்களுக்கு ஆறுதலாக இருக்குமே என்பதற்காகத்தான் என்னோடு வருமாறு அழைக்கிறேன்."

"அப்படிச் செய்வதற்கில்லை பூரணி செல்லத்தை வீட்டில் தனியாக விட்டிருக்கிறேன், சமையற்காரி துணைக்குப் படுத்துக் கொண்டாளோ இல்லையோ? நேரமானாலும் பரவாயில்லை. உன்னை வீட்டில் கொண்டு போய் விட்ட பின் நான் திரும்பி விடுகிறேன்' என்று பிடிவாதமாக மறுத்து விட்டாள் மங்களேஸ் வரி அம்மாள். தங்கை மங்கையர்க்கரசியையும், தம்பி சம்பந்தனையும், கமலாவின் தாயிடம் சொல்லி, அவர்கள் வீட்டில், படுக்கச் செய்து விட்டுத் தன் வீட்டைப் பூட்டிக் கொண்டு வந்திருந்தாள் பூரணி. இனி இந்நேரத்துக்குமேல் திருப்பரங்குன்றம் போனால் கமலாவின் வீட்டுக்குப் போய் குழந்தைகளை எழுப்பி தன் வீட்டுக்கு அழைத்துப் போக முடியாது. இரண்டுங் கெட்ட நேரத்தில் அவர்கள் வீட்டில் போய்க் கதவைத் தட்டித் தூக்கத்தைக் கெடுப்பது நன்றாக இராது. அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/185&oldid=555908" இலிருந்து மீள்விக்கப்பட்டது