பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 8 குறிஞ்சிமலர்

வேண்டும் என்று அப்பாவின் மதிப்புக்குரிய தமிழாசிரியர்கள் சிலர் யோசனை கேட்டார்கள். -

‘எழுத்திலும் பேச்சிலும் மட்டுமல்ல, வேங்கடம் முதல் குமரிவரை தமிழ் வாழும் நிலமெல்லாம் வாழ்க்கையிலேயே பிழையில்லாத ஒழுங்கும், அறமும் அமைய முடியுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்'- என்று புன்னகையோடு பெரு மிதம் ஒலிக்கும் குரலில் அப்போது அப்பா அவர்களுக்கு மறுமொழி சொன்னார். அதைக் கேட்ட போது அன்று எனக்கு மெய்சிலிர்த்ததே! ஒழுங்கிலும், நேர்மையிலும், அவருக்கு அவ்வளவு பற்று, நம்பிக்கை.

பொழுது நன்றாக விடிந்து விட்டது. சரியான மீட்டரில் வைக்கப்பெறாத வானொலிப் பெட்டிமாதிரி வீதியின் பல்வேறு ஒலிகள் கலந்து எழுந்து விழிப்பைப் புலப்படுத்தின. மானிடத்தின் இதயத்தில் அடி மூலையிலிருந்து மெல்லக் கேட்கும் சத்தியத்தின் குரலைப் போல் தொலைவில் கோவில் மேளம் ஒலித்தது. பூரணி எழுந்து நீராடிவரக் கிணற்றடிக்குச் சென்றாள். -

பக்கத்துப் பெருஞ்சாலையில் நகரத்திலிருந்து திருப்பரங் குன்றத்துக்கும், திருநகருக்கும் வந்து திரும்புகிற டவுன் பஸ்களில் கலகலப்பு எழுந்தது. நகரத்துக்கு அருகில் கிராமத்தின் அழகோடு தெய்வீகச் சிறப்பையும் பெற்றுத் திகழ்ந்து கொண்டிருந்தது திருபரங்குன்றம். மதுரை நகரத்தின் ஆடம்பர அழகும் கம்பீரமும் இல்லாவிட்டாலும், அதற்கு அருகே அமைந்த எளிமையின் எழில் திருப்பரங்குன்றதுக்கு இருந்தது. என்றும் இளையனாய், ஏற்றோருக்கு எளியனாய்க் குன்று தோறாடும், குமரன் கோவில் கொண்டிருந்து ஊருக்குப் பெருமை யளித்தான். - -

எந்தக் காலத்திலோ வளம் மிகுந்ததாக இருந்து விட்டு இப்போது மொட்டைப் பாறையாய் வழுக்கை விழுந்த மண்டை போல் தோன்றும் ஒரு குன்று. அதன் வடப்புறம் கீழே குன்றைத் "தழுவினாற் போல் சிறியதாய் சீரியதாய் ஒரு கோபுரம், படிப்படியாய்க் கீழ்நோக்கி இறங்கு முகமாகத் தளவரிசை அமைந்த பெரிய கோவில். அதன் முன்புறம் அதற்காகவே அதை வணங்கியும், வணங்கவும், வாழ்ந்தும் வாழவும் எழுந்தது போலப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/20&oldid=555744" இலிருந்து மீள்விக்கப்பட்டது