பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி * 199 அன்று காலை எண்ணங்கள் அலைபாயும் நிலையற்ற மனநிலையோடு இருந்தபோது இவ்வளவும் நினைவுற்றான் அவன். தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை எடுத்துக் கீழ்கண்ட வாறு எழுதினான்: r

'பழைய காலத்தில் அசுணம் என்ற ஒருவகைப் பறவை இருந்ததாம். அதன் செவிகளுக்கு இனிய நளினமான இசைகளை உணர்ந்தே பழக்கமாம். விவகாரமான கெட்ட ஒசைகளைக் கேட்க நேர்ந்து விட்டாலே போதும், துடிதுடித்துக் கீழே விழுந்து உயிர் பிரிந்து விடுமாம் அந்த அசுணப் பறவை.

'வாழ்வின் தீமை நிறைந்த கெட்ட செய்திகளை உணரும் போது இந்த அசுணப்பறவைபோல் நாமே அழித்து விட்டா லென்ன என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நேற்றுத்தான் எத்தனை கெட்ட செய்திகளை உணரும்படி நேர்ந்து விட்டது அந்தச் சிறு பையன் திருநாவுக்கரசு எப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்து, எந்த மாதிரிக் கெட்டுப் போய்விட்டான் என்று நினைக்கவே வேதனையாக இருக்கிறது. அவனாவது சிறு பையன்! கண்டித்துப் பயமுறுத்தி வழிக்குக் கொண்டு வந்து விடலாம். குதிர்மாதிரி வளர்ந்த பெண்ணுக்கு ஒடிப்போகத் தைரியம் வந்திருக்கிறது! பெண்கள் நம்முடைய சமுதாயப் பண்ணைக்கு விதை நெல்லைப் போன்றவர்கள் வருகின்ற தலைமுறைகளை நன்றாகப் பயிர் செய்ய வேண்டியவர்கள். விதை நெல்லே கெட்டுச் சீரழிந்தால் விளைவு என்ன ஆகும்?" நினைக்கவே அச்சமாக இருக்கிறது. பாரதபுண்ணிய பூமியின் பெருமையெல்லாம் கங்கையும் காவிரியும் போலப் புனிதமாகப் பாய்ந்து வரும் அதன் தூய தாய்மைப்பிரவாகத்தில் அல்லவா இருக்கிறது? இந்தப் பெண்மையின் புனித வெள்ளத்தில் அழுக்கு கள் கலந்தால் என்ன ஆகும்? விதை, நெல்லையே அழித்துக் கொண்டிருக்கிறோமா நாம்?...' -

உள்ளே யாரோ நடந்துவருகிற மிதியடி ஒலி கேட்கவே அரவிந்தன் எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலைநிமிர்ந்தான். அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவசர அவசரமாக நோட்டுப் புத்தகத்தை மூடி மேஜை இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து நின்றான் அரவிந்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/201&oldid=555924" இலிருந்து மீள்விக்கப்பட்டது