பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 குறிஞ்சிமலர்

வேலை செய்யறான். மற்ற இரண்டு பேரும் படிக்கிறாங்க. அப்பா அம்மா இல்லை. அந்தப் பெண்தான் வளர்த்துக் காப்பாத்தணும். கல்யாணமாவது கார்த்தியாவது. தெருத் தெருவாகப் பிரசங்கம் செஞ்சிட்டிருக்குது, அது. நானும் சாடை மாடையா இரண்டு தரம் கேட்டேன். அதற்குக் கல்யாணத்தைப் பத்தியே நெனைப்பிருக் கிறதாகத் தெரியவில்லை. பேர், புகழ் எல்லாம் சம்பாதிச்சிருக்கு. சுவரெல்லாம் அது பேரைக் கலர் நோட்டீஸ் அடிச்சு ஒட்டி யிருக்கான். எது இருந்து என்ன? அதது வயசில ஆகணும். அது மனசிலே என்ன நினைச்சிட்டிருக்குதோ?”

இலட்சியங்களினால் மலர்ந்து ஆயிரமாயிரம் புனித எண்ணங்களில் தோய்ந்திருந்த அந்தப் பரந்த உள்ளத்தில் ஈட்டியாகக் குத்தியது, அந்த உரையாடல். மனத்தில் அந்தப் புண்ணைத் தாங்கிக்கொண்டு சிறிதுநேரம் இருந்து பாட்டியிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டாள் பூரணி. ஞாயிற்றுக் கிழமை யன்று, கவிகள் காணாத பெண்மை'யை பற்றிப் பேசுவதற்காகச் சிந்தனைகளைத் தொகுத்துக் கோர்வைப்படுத்திக் கொண்டிருந்த பூரணியின் உள்ளத்தில் உல்லாசம் பாழ்பட்டு உளைச்சலும், அலுப்பும் வந்து தளரச் செய்தன. ஓதுவார் வீட்டு வளை காப்புக்குப் போனால் தன் மனத்தில் இவ்வளவு பெரிய ஆழமான புண்கள் உண்டாகும் என்று தெரிந்திருந்தால் அவள் போயே இருக்கமாட்டாள். * , , ,

'ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம்! அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம் செல்வமும் செல்வாக்கும் சம்பாதிக்கலாம்! ஆனால் சாதாரணமான உலகத்தில் சாதாரணமான மனிதர்கள் வாழும் சாதாரண வாழ்க்கையைச் சம்பாதித்துக் கொள்ளாதவரை, சாமானிய உலகில் அவளைப் பெண்ணாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள் போலிருக்கிறதே என்று மனம் நைந்து எண்ணினாள் அவள். பெரிய வாழ்வைப்பற்றி எண்ணிக் கொண் டிருந்தாள் அவள். மிகச் சிறிய வாழ்க்கையை அவசரமாக நினைவுபடுத்தினார்கள் அவர்கள். அரவிந்தனோடு பழகத் தொடங்கிய புதிதில் இப்படி ஒரு வாழ்க்கைக்கு ஆசையும், அவசரமும் அவள் மனத்தில் உண்டாயிற்று. இன்னும் கூட அழகிய இலட்சியக் கனவாக அரவிந்தன் அவள் மனத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/220&oldid=555943" இலிருந்து மீள்விக்கப்பட்டது