பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 குறிஞ்சிமலர் சிறு சிட்டுக் குருவிபோல் அம்மாவின் மடியில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள் அவள். அம்மா அவளுடைய தலைமுடியை அவிழ்த்து எண்ணெய் தடவிப் பின்னுகிறாள். அப்போது தான் கல்லூரியிலிருந்து வந்த அப்பா வீட்டுக்குள் நுழைகிறார். பூரணி தன் மலர்ந்த கண்கள் விரிய அப்பாவை ஆவலோடு பார்க்கிறாள்.

"பார்த்துக்கொண்டே இரு நான் சொல்வதை எதிர் காலத்தில் நீயே உன் கண்களால் காணப் போகிறாய். உன் பெண்ணுக்கு வாய்த்திருக்கும் கண்கள் அற்புதமானவை. பூரணமானவை. அவள் இந்தக் கண்களாலேயே தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தை ஆட்டிப் படைக்கப் போகிறாள். இப்படிக் கண் உள்ளவர்கள் தெய்வீக அம்சம் உள்ளவர்கள்' என்று அப்பா அம்மாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே சொல்கிறார். அதைக் கேட்டு அம்மாவும் சிரிக்கிறாள்.

'கண்ணேறு படக்கூடாது என்று சொல்வார்கள். குழந்தைக்கு உங்கள் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது' என்று சொல்கிறாள் அம்மா.

'யாருடைய கண்ணும் இவளை எதுவும் செய்து விட முடியாது. அசுத்தங்களையும், குற்றங்களையும் இவளுடைய கண் பார்வையே அழித்து விடும், நீ கவலைப்படாதே" என்று சொல்லி அம்மாளின் மடியிலிருந்த பூரணியைத் தூக்கி வாரி அணைத்துக் கொள்கிறார் அப்பா. அப்பாவும், அம்மாவும் தென்படாமல் மறைகிறார்கள், கனவுத் தோற்றம் மாறுகிறது.

அன்பு மயமாயிருந்த அந்த அம்மா இன்று எங்கே போய்

விட்டாள்? கனவு நிலையில் பூரணியின் கண் முன் கவிந்த குடைபோல் வான விதானம் தெரிகிறது. சாம்பல் நிறமான ஆகாயத்தில் நீலமும் சிவப்புமான மேகங்கள் அழித்து அழித்துக் கோலம் போடுவதுபோல் விளையாடிக் கொண்டிருக்கையில் அவற்றின் நடுவேயிருந்து திடீரென்று வானத்தில் யானைத் தந்தங்கள் முளைத்தாற்போல் இரண்டு வளையணிந்த சிவப்புக் கரங்கள் நீள்கின்றன. மேகங்களுக்குக்கிடையே சரத் காலத்துச் சந்திரனைக் காண்பதுபோல் அம்மாவின் முகத்தைக் காண்கிறாள் பூரணி. அடடா வானமே ஒருமுகமாக மாறினாற்போல் அந்த முகம்தான் எத்தனை பெரிதாகத் தெரிகிறது. ... *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/224&oldid=555947" இலிருந்து மீள்விக்கப்பட்டது