பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23() - குறிஞ்சிமலர்

போல் இயற்கையின் கொள்ளை கொள்ளையான அழகுக் காட்சிகள். கீழே அதலபாதாளத்துக்கு இறங்கும் நீலப் பசுமை விரிந்த பள்ளத்தாக்குகள். மேலே வீறு கொண்டு வீங்கிய மலைக் கொடு முடிகள். எத்தனை நிறத்துப் பூக்கள் எத்தனை விதமான கொடிகள் எவ்வளவு பெரிய மரங்கள் எட்டிப் பிடித்து இழுத்துத் தடவுகிறாற்போல் மிக அருகில் மேகம் தவழும் ஆகாயம். கார் வளைவுகளிலும் திருப்பங்களிலும் திரும்பும்பொதெல்லாம் 'இதோ இங்கேதான் நான் இருக்கிறேன்' என்று ஓடி வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது போல் புதிய புதிய இயற்கைக் காட்சிகள். குலை தள்ளிய தாய்மைக் கோலம் காட்டும் மலைவாழைத் தோட்டங்கள். கொத்துக் கொத்தாய்க் கொடி முந்திரிப் பழங்கள் தொங்க திராட்சைக் கொடி படர்ந்த பசும் பந்தல்கள், எல்லாம் வனப்பின் வெள்ளமாய்த் தெரிந்தன. கை புனைந்து இயற்றாக் கவின் பெருவனப்பு' என்று இயற்கை யழகை நக்கீரர் வர்ணித்ததை நினைத்துக் கொண்டாள் பூரணி. மலைவாசத்தின் சிறப்புகளைப் பற்றித் தமிழ்ப் பெரியார் திரு. வி.க. எழுதியிருக்கும் உருக்கமான கட்டுரை அவளுக்கு நினைவு வந்தது.

'கோடைக்கானல் இத்தனை அழகாக இருக்குமென்று நான் நினைக்கவே இல்லை, வசந்தா போன கோடையின் போது உன் அம்மா கூப்பிட்டார்கள். நான் வராதது எத்தனை நஷ்டம் என்று எனக்கு இப்பொழுதுதான் புரிகிறது' என்று தன் அருகில் மெளனமாக விற்றிருந்த வசந்தாவின் பக்கம் திரும்பிக் கூறினாள் பூரணி. -

அலுப்படைந்து சலித்தாற்போன்ற குரலில் வசந்தா பதில் சொன்னாள். 'முதல் தடவை வருவதனால் உங்களுக்கு வியப்பாக இருக்கிறது. எனக்கு என்னவோ வருடந் தவறாமல் பார்த்துச் சலித்து விட்டது. நாங்கள் இலங்கையில் இருக்கும்போது அப்பா ஒவ்வோர் ஆண்டு மார்ச் மாதம் எல்லோரையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுவார். ஜூலையில் தான் மறுபடியும் இலங்கை திரும்புவோம். அப்பாவின் நினைவுக்காகத்தான் அம்மா இன்னும் இங்கிருக்கிற பங்களாவை விற்காமல் வைத்துக் கொண்டிருக்கிறாள்.' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/232&oldid=555955" இலிருந்து மீள்விக்கப்பட்டது