பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 குறிஞ்சிமலர் 'இந்தத் தொடர்பைப்பற்றி மங்களேஸ்வரியம்மாள் என்ன நினைப்பார்? பூரணி என்ன நினைப்பாள்? முருகானந்தத்தின் - பெற்றோர்கள் தான் என்ன நினைப்பார்கள்? சிறுபிள்ளைத் தனமாக அல்லவா இருக்கிறது? நாலு தடவை சந்தித்து சிரித்தும் பேசியும் பழகி விட்டால் மனத்தில் இந்த அசட்டுத்தனமான கனவுகள் உண்டாகிவிடுகின்றன. இராத்திரி அச்சகத்துக்கு வந்தால் முருகானந்தத்தைக் கண்டிக்க வேண்டும்? என்று தீரச் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான், அரவிந்தன்.

செல்வத்தி மிரும் இறுமாப்பும் நிறைந்தவள். ஆடம்பர அசட்டுத்தனங்களும், வெளிப்பகட்டும் உள்ளவள் என்று தான் வசந்தாவைப் பற்றிப் பூரணி சொல்லி இருந்தாள். அத்தகைய இறுமாப்பு நிறைந்த பெண் உள்ளம் அதற்கு நேர்மாறான கொள்கைகளும் சாதாரண வாழ்க்கை வசதிகளும் உள்ள முருகானந்தத்தை நோக்கி எப்படி மலர்ந்தது? எவ்வாறு நெகிழ்ந்தது? சிந்திக்கச் சிந்திக்க அந்த இருவரின் இணைப்பு விளங்காப் புதிராகவே தோன்றியது அவனுக்கு. கணத்துக்குக் கணம் ஆசைகளும் விருப்பங்களும் மாறுபடும் சபலம் என்ற உணர்வே! உனக்குத்தான் பெண் என்று மறுபெயர் சூட்டியிருக் கிறார்கள்' என்னும் கருத்துப்பட 'ஹாம்லெட்' நாடகத்தில் ஷேக்ஸ்பியர் எழுதியிருப்பது நினைவு வந்தது அவனுக்கு. உலகத்து அறிஞர்களின் பொன்மொழிகளைக் குறித்து வைக்கும் தனது நோட்டுப் புத்தகத்தில் இக்கருத்தைக் குறித்திருந்தான் அவன். எல்லாப் பெண்களையும் இந்தச் சட்டத்தில் அடக்க விருப்பப்படவில்லை அவன் மனம். பூரணியைப்போல் அறிவு வளர்ச்சியிலும் தொண்டு, தியாகங்களிலும் கரைந்து போய் சொந்தச் சபலங்களை மறந்து விடுகிறவர்களும் இருக்கிறார்களே! அரவிந்தனின் சிந்தனை எதிரே வந்து கை நீட்டிய ஓர் இளைஞனால் கலைந்தது.

"சார், சாப்பிட்டு ஏழு நாளாச்சு சார் ஊருக்குத் திரும்பிப் போகலாமென்றால் கையில் காசு இல்லை சார். ஏதாவது உதவி செய்யுங்க சார் வயிற்றுப்பசி தாங்கமுடியலை சார். இன்னும் சிறிது நேரம் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தால் இப்படியே நடு வீதியில் செத்துப் போய் விழுந்து விடுவேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/240&oldid=555963" இலிருந்து மீள்விக்கப்பட்டது