பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 குறிஞ்சிமலர் 'அப்படியில்லை. இந்தக் காரியத்தை நீதான் என்னைக் காட்டிலும் தெளிவாக அவளுக்கு எடுத்துச் சொல்ல முடியும், ஒப்புக் கொள்ளச் செய்யவும் முடியும்'

"எதற்கு ஒப்புக் கொள்ளச் செய்ய முடியும்?" "அவசரப்படாதே! நானே சொல்லிக் கொண்டு வருகிறேன். கவனமாகக் கேள்!' - தனது கூர்ந்து நோக்கும் ஆற்றலையெல்லாம் ஒன்று சேர்த்து அவர் முகத்தையே பார்த்தான் அரவிந்தன். அவர் தொடர்ந்தார்; 'இன்னும் ஏழெட்டு மாதத்தில் பொதுத் தேர்தல் வருகிறது."

"ஆமாம் வருகிறது.' 'அரசியல் துறையில் ஈடுபடுகிறவர்களும், பதவி வகிக்கிறவர் களும், இன்று நாட்டில் எவ்வளவு செல்வமும், செல்வாக்கும் புகழும் குவிந்து மாமன்னர்களைப் போல் வாழ்கிறார்களென்பதை நீயே நன்கு அறிவாய்.”

'அறிவேன், அதற்காக...' - 'நீ மடக்கி மடக்கிக் கேள்வி கேட்பதைப் பார்த்தால் நான் இப்போது சொல்லி இருப்பதைக் கேட்பதற்கு முன்னாலேயே அதன்மேல் உனக்கு எதிர்மறையான அபிப்பிராயம் உண்டாகி விட்டாற்போல் தோன்றுகிறதே?"

"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! நீங்கள் மேலே சொல்லுங்கள்." -

"நான் உன்னை எதற்காகவோ வற்புறுத்தி ஏமாற்றுகிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே! நல்ல சமயத்தில் இந்த யோசனை என் மனத்தில் உருவாயிற்று. நகரத்தில் முக்கியப் பிரமுகர்கள் எல்லோருக்குமே இந்த யோசனை பிடித்திருக்கிறது. நிச்சயம் வெற்றி கிடைக்குமென்று ஆமோதித்துக் கூறி எல்லோருமே ஒத்துழைப்பதாகச் சொல்கிறார்கள். பணச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னால் தாங்க முடியும். சூழ்நிலையும் சாதகமாக இருக்கிறது."

'நீங்கள் தேர்தலுக்கு நிற்கப் போகிறீர்களா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/248&oldid=555971" இலிருந்து மீள்விக்கப்பட்டது