பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 251 உட்கார்ந்துவிட்டாய்? பெரியவர் என்ன சொல்லிவிட்டுப் போகிறார் உன்னிடம் ? ஏதோ என்னையும் கலந்து கொண்டு காலையில் முடிவு சொல்லும்படிக் கூறிவிட்டுப் போகிறாரே என்ன அது?" என்று கேட்டான். - -

முருகானந்தம் - வசந்தா தொடர்பு எப்போது எந்த விதத்தில் ஆரம்பமாகிக் கடிதங்கள் எழுதிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்தது: என்று அவனையே விசாரித்துத் தெரிந்து கொண்டு கண்டிக்க வேண்டுமென்று அரவிந்தன் நினைத்திருந்தான். ஆனால் இப் போது அந்த நினைவே முற்றிலும் மறந்து போய் விட்டிருந்தது அவனுக்கு. மீனாட்சி சுந்தரம் பூரணியைத் தேர்தலில் நிறுத்தும் விஷயம் பற்றிச் சொல்லி விட்டுப் போனதிலிருந்து அவன் அதைப் பற்றிய நினைவுகளிலேயே மூழ்கி விட்டான்.

முருகானந்தம் மீண்டும் வற்புறுத்திக் கேட்டதின் பேரில் மீனாட்சி சுந்தரம் தன்னிடம் கூறியவற்றைச் சுருக்கமாக அவனுக்குச் சொன்னான் அரவிந்தன். அவன் நினைத்தது போல் முருகானந்தம் வருத்தமோ, திகைப்போ அடையவில்லை.

“பூ இதற்குத்தானா இப்படிக் கவலைப்படுகிறாய்? மகிழ்ச்சிப் படவேண்டிய செய்தி இது பூரணியக்கா அரசியலில் புகுந்தால் அரசியலில் இருக்கிற களங்கங்கள் அழிந்து அரசியலுக்கே நல்ல பேர் ஏற்பட்டுவிடும். உன் முதலாளி மீனாட்சிசுந்தரம் நன்றாகச் சிந்தித்துக் காரணத்தோடு தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எனக்குப் பிடித்திருக்கிறது இந்த முடிவு என்று உற்சாகம் பொங்க மறுமொழி தந்தான் முருகானந்தம். உடனே அரவிந்தன் சினமடைந்து பேசலுற்றான். - -

'நீங்கள் எல்லோரும் அரசியல் இயக்கம் வளரவேண்டு மென்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். நானோ ஒழுக்கமும் பண்பாடும் வளர்வதற்கு ஒர் இயக்கம் வேண்டுமென்று ஆசைப் படுகிறேன். இந்த இரண்டாவது இயக்கத்தை வேரூன்றி வளர்க்க இன்று இந்தத் தேசத்தில் ஆளே கிடைக்கமாட்டார்கள் போலிருக்கிறது. நீ என்றுமே அரசியல்வாதி என்பது எனக்குத் தெரியும் முருகானந்தம். உன்னிடமிருந்து இந்தப் பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன். ' -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/253&oldid=555976" இலிருந்து மீள்விக்கப்பட்டது