பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 குறிஞ்சிமலர்

அவளுக்கு ஏற்பட்டதில்லை. உடம்பைப் பொறுத்த வரையில் அப்பாவின் மடியில் உட்கார்ந்து, ஆத்திச்சூடி சொன்ன காலத்துச் சிறுமியாகவே இன்னும் தன்னை நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். அப்படி இல்லை? நீ வளர்ந்திருக்கிறாய்' என்கிறது இந்தக் கண்ணாடி.

அவள் துன்பப்பட்டிருக்கிறாள் பொறுப்புகளைச் சமாளித் திருக்கிறாள் வாழ்க்கை வீணையின் நரம்புகளில் எல்லா விதமான துன்பநாதங்களையும் கேட்டிருக்கிறாள். ஆனால் அவற்றால் மூப்புக்கொண்டு அழிந்து விடவில்லை. தன்னுடைய உடம்பைப் பேண நேரமின்றி, பேணும் நோக்கமும் இன்றித் தன்னையே மறந்துவிட்டிருந்தாள் அவள். ஆனால் உடம்பு அவளை மறந்துவிடவில்லை. -

கண்ணாடியில் உடம்பைக் கண்டு கொண்டே மனத்தில் சிந்தனைகளைக் காண்பது சுகமாக இருந்தது. சமையற்கார அம்மாள் வந்து மருந்து சாப்பிட வேண்டிய நேரம் என்று நினைவுபடுத்தியபோதுதான் பூரணி இந்த உலகத்துக்குத் திரும்பி வந்தாள். மதுரையில் அவள் உடல் நிலையைப் பரிசோதித்துக் காற்றுமாறவேண்டுமென்று கூறிய டாக்டர் ஏதோ டானிக்'குகள், மாத்திரைகள் எல்லாம் நிறையக் கொடுத்து அனுப்பியிருந்தார். பழங்கள், காய்கறி, கீரை, காய்ச்சின பால் எல்லாம் நிறையச் சாப்பிட வேண்டுமென்பதும் அவர் கூறி அனுப்பியிருந்த அறிவுரை. டாக்டரின் அறிவுரைகளுக்கு ஏற்ப்ப் பூரணியைக் கவனித்துக் கொள்கிற பொறுப்பு வசந்தாவிடமும் சமையற்கார அம்மாளிடமும் விடப்பட்டிருந்தது.

பூரணி உள்ளேபோய் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் சாய்வு நாற்காலியில் வந்து சாய்ந்துகொண்டாள். கடல் கடந்தும் நெடுந் தொலைவுக்குப் பயணம் செய்தும், ஆற்றவேண்டிய அந்தச் சொற்பொழிவுகளை, ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதைத் தனக்கு மிகவும் அந்தரங்கமான எவரிடமாவது கலந்தாலோசித்து முடிவு செய்தால் நன்றாக இருக்குமென்று அவளுக்குத் தோன்றியது. -

இந்தச் சமயத்தில் அரவிந்தன் அருகில் இருந்தால் அவரைக் கேட்டுக் கொண்டு முடிவு செய்யலாம் என்னுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/268&oldid=555991" இலிருந்து மீள்விக்கப்பட்டது