பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 குறிஞ்சிமலர் விளைச்சல் சுகப்படாததனால் அவரால் தம்பிக்குக் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

“என்ன இருந்தாலும் நீ எனக்கு உடன் பிறப்புத்தானே அப்பா கடவுள் புண்ணியத்தில் செட்டாகச் சேர்ந்து வைத்துக் கொண்டு நன்றாகயிருக்கிறாய். என்னைப்போல் வாரியிறைத்து விட்டு நிற்கவில்லை நீ. அடுத்த மகசூலில் உன் கடனை அடைந்து விடுகிறேன். அதுவரை பொறுத்துக்கொள். ஏதோ என் போதாத காலம் விளைச்சல் சரியில்லை என்று தம்பியை விடு தேடிப் போய்க் கெஞ்சினார் அரவிந்தனின் தந்தை. ஆனால் அவருடைய தம்பி அதற்கு இணங்கவில்லை. மனைவி சொல் கேட்டுக் கொண்டு அண்ணனிடம் மரியாதையின்றிப் பேசினார்.

'சொன்னபடி வாங்கின கடனைக் கீழே வைத்து விட்டு மறுவேலை பார். பணத்துக்கும் உடன்பிறப்புக்கும் சம்பந்த மில்லை."

'ஏன்டா நீ பணத்தோடுதான் பிறந்தாயா என்னோடு பிறக்கவில்லையா? பெண்பிள்ளை பேச்சைக் கேட்டுக் கொண்டு மூத்தவன் என்கிற மதிப்புக்கூட இல்லாமல் இப்படி என்னிடம் கண்டிப்புப் பண்ணலாமா?"

'இதெல்லாம் எதற்கு அண்ணா வீண் பேச்சு பணம் என்றால் கண்டிப்பில்லாமல் முடியாது."

அவர் பெரிய மானி. வேறு வழியில்லாமல் போகவே நம்முடைய சொத்து என்று மீதமிருந்த கொஞ்ச நிலத்தையும் விலைக்கு விற்றுத் தம்பிக்குக் கடன் கொடுத்து நல்லவரானார் அரவிந்தனின் தந்தை. அவருக்கும் அவர் மனைவிக்கும் நெடுங்காலம் பிள்ளைப்பேறில்லாமல் காலந்தள்ளிப் பிறந்த கடைசிக் கொழுந்து தான் அரவிந்தன். செல்லப்பிள்ளையாக வளர்த்தார்கள் அந்தக் குழந்தையை.

சிற்றப்பாவின் கடனால் மனம் ஒடிந்து தந்தை நிலத்தை விற்கிறபோது, அரவிந்தனுக்குப் பத்து வயது. ஒரளவு நினைவு தெரிந்த காலம்தான் அது. உள்ளுர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/274&oldid=555997" இலிருந்து மீள்விக்கப்பட்டது