பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 277

பட்டுக் கொண்டிருந்த அவருடைய காலமும் முடிந்து விட்டதென்று இதோ இந்தத் தந்தி சொல்லுகிறது. அரவிந்தன் மதுரையில் இருப்பது கிராமத்தில் உறவினர்களுக்குத் தெரியும். சிறுமைகளும் பணத்தாசையும் நிறைந்த அவர்களோடு நெருங்கிப் பழகவே இப்போது அவனுக்கு அருவருப்பு ஏற்பட்டிருந்தது. 'இந்தத் தந்தியைக் கொடுத்த உறவினர்கள் என்ன பொருளில் எதற்காக அவனுடைய பெயருக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பது அவனுக்குப் புரிந்தது.

அவருக்கு வேறு வாரிசு இல்லை. அவன் போய்த்தான் கொள்ளி வைக்க வேண்டும்; அவர் தான் அன்று அந்தப் பச்சைப் பிள்ளை வயதில் அவனை அடித்துத் தூரத்தினார். அவர் துரத்தியிராவிட்டால் இன்று இப்படி ஆகியிருக்க முடியாது. அவன் சிற்றப்பாவும், சித்தியும் படுத்தி அனுப்பிய கொடுமையில் தான் அவனுக்கு வாழவேண்டும், தன் முயற்சியால் வளர வேண்டும்’ என்ற வைராக்கியமே உண்டாயிற்று. அந்த வைராக்கியமே அவனை வளர்த்தது. -

'மறுபடியும் அவருடைய வீட்டு வாயிற் படியை மிதிப்ப தில்லை' என்ற வைராக்கியத்தோடு அன்று அவன் கிளம்பியிருந் தான். அந்த உறுதியான பிடிவாதத்தின் பயனை இன்று அவன் அடைந்து விட்டான். ஆனால் சிற்றப்பா ஊரையெல்லாம் ஏமாற்றி உறவினரை வஞ்சித்து மற்றவர்கள் எல்லாம் ஏழையாகும்படி பிறரை அழச்செய்து பணமும், நிலமும் சேர்த்தாரே; அதன் விளைவை அடையாமலே செத்துப் போய்விட்டாரே? சாவாவது நன்றாக வந்ததோ? நீரிழிவு நோயோடு எழுந்து நடமாட முடியாமல் திணறி வேதனைப்பட்டு, 'நான் விரைவில் சாக வேண்டும்' என்று வருந்திச் சாவுக்கு ஏங்கச் செய்து வந்த சாவு அல்லவா அவருடைய சாவு? மனிதர்கள் என்னவோ பணத்தா லேயே எல்லாம் நிறைவேற்றிக் கொண்டு போய்விடலாம் என்று பார்க்கிறார்கள்; பணம் ஒர் அழகான சொப்பனம். கனவு எத்தனை அழகாயிருந்தாலும் விரைவில் அதிலிருந்த விழித்துக்கொண்டுதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் சிற்றப்பாவைப்போல் ஆக வேண்டியதுதான் என்று தந்தியைப் படித்துவிட்டு நினைத்துக் கொண்டான் அவன். சிற்றப்பா வாழ்வை நடத்திய விதத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/279&oldid=556002" இலிருந்து மீள்விக்கப்பட்டது