பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 27

பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டி வேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.

'முருகனுடைய அருள் மணம் போல் இது எங்க ஊருக்குத் தனிச் சிறப்பு அம்மா என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண் டிருப்பார். அந்த மனம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.

வீட்டுக்காரருக்கு ஆறு மாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும்... அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகை யில் ஒர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய் விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளி பரப்பிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மனம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றி விடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது. வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் . கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் செக் அனுப்பியிருந்த வியாபாரி மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவி பெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும், வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.

"பூரணி குற்றங்களை மறைவாகச் செய்து கொண்டு வெளியார் மெச்சும் படி செல்வனாக வாழ்வதை விடக் கேவல மான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படை யான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!' என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். 'அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது, அந்த அன்பில் இறைவன் இருக்கிறான். அதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/29&oldid=555753" இலிருந்து மீள்விக்கப்பட்டது