பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 குறிஞ்சிமலர்

அவருக்குப் பிறந்தவளான ஒரே மகளும் நிலையத்துக்கு வந்திருந்தார்கள். அவர்களை அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தான் அரவிந்தன். பர்மிய இரத்தமும் தமிழ் இரத்தமும் கலந்த அழகில் அவருடைய மகள் காண நன்றாக இருந்தாள். தமிழ்நாட்டுக் கோலத்தில் நிலவு முகமும், மயக்கும் விழிகளுமாக நின்றாள். ஆனால் அந்தப் பெண்ணின் தாய் மட்டும் மதுரைக்கு வந்து இத்தனை காலமான பின்னும் பர்மியத் தோற்றமும், அதற்கேற்ற அலங்காரங்களும் மாறவில்லை. கவிதை உணர்வின் புனிதமான எழுச்சியோடு அவர்கள் தோற்றங்களை அரவிந்தன் பார்த்தானே தவிர, வேறு விரசமான நினைவே இல்லை. அவன் மனதுக்கு விரசமாக நினைக்கவும் தெரியாது.

'நம்ப உறவுக்காரப் பிள்ளையாண்டான். அரவிந்தன் என்று தங்கமான பெயர். இவனுடைய சிற்றப்பாவின் கேதத்துக்காகத் தான் நான் போயிருந்தேன்' என்று பெண்ணுக்கும் மனைவிக்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

நான் என்னவோ பர்மாவில் போய் பணத்தைத் திரட்டிக் கொண்டு வரலாம்னு போனேன் அப்பா திரும்புகிற காலத்தில் இதோ இருக்கிறாளே, இந்தப் பொல்லாதவள் என் மனத்தைக் கொள்ளையடித்துக் கொண்டுவிட்டாள். நான் இந்த அழகி யையே கொள்ளையடித்து இங்கே கூட்டிக்கொண்டு வந்து விட்டேனப்பா' என்று மிகவும் நகைச்சுவையாக மனைவியை அவனுக்கு அறிமுகம் செய்தார். அப்போது அந்தப் பர்மிய நங்கை சற்றே தலை சாய்த்து சிவந்த முகம் மேலும் சிவக்க ஒரு நாணப் புன்னகை பூத்தாள். உலகத்து மகாகவிகளின் நளின எழில்கள் யாவும் அந்தப் பர்மிய நங்கையின் சிரிப்பில் போய் இணைந்து கொண்டனவோ எனும்படி அழகாயிருந்தது அந்தச் சிரிப்பு.

“எனக்குக் கோடைக்கானல் போக வேண்டும். இப்படியே பஸ் நிலையத்துக்குப் போனால் நாலு மணிக்குக் கோடைக்கள்னல் போகிற கடைசி பஸ் இருக்கிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன். பதினாறாம் நாள் காரியத்துக்கும் நீங்கள் கண்டிப் பாய் வந்துவிட வேண்டும்' என்று இரயில் நிலையத்திலிருந்தே பர்மாக்காரரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பிவிட முயன்றான் அரவிந்தன். இரயிலில் அவர் பேசிய பேச்சுக்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/302&oldid=556025" இலிருந்து மீள்விக்கப்பட்டது