பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 குறிஞ்சிமல. தங்களிடம் உள்ள நேர்மைக் குறைவால், அதைத் தாங்கள் பிறரிடம் காட்டும் போது பெரிதாக்கிக் காட்டி வாழ்கிறவர்கள் சிலர் சமூகத்தில் உண்டு. அகவாழ்வில் கொடுமையே உருவானவி ராய்த் தெரியும் பர்மாக்காரர் நகரில் புகழும் பதவியும் பெற்று நேர்மையானவர்போல் காட்டிக்கொள்வது இந்த விதத்தில் தான் என்பது அன்று அரவிந்தனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கிவிட்டது.

பிறரை வெறுப்பதற்கும், கடுமையாகப் பகைத்துக் கொண்டு அடி உதைகளில் இறங்குவதற்குங் கூட ஒரு வகை முரட்டு: சாமர்த்தியம் வேண்டும். ஆனால் அன்பின் நெகிழ்ச்சியும் கலைகளின் மென்மைப் பண்பும் கலந்த மனமுள்ளவர்களுக்கு இந்த முரட்டுத்தனம் வராது. அரவிந்தன் சிறு வயதிலிருந்தே இந்த முரட்டுத்தனம் உண்டாகாமல் வளர்ந்தவன்.

முருகானந்தமோ இந்த முரட்டுத்தனத்தையே வீரமாக்கிக் கொண்டவன். பர்மாக்காரர் எஸ்டேட் மாளிகையில் அவரால் ஏவப்பட்ட முரட்டு அடியாள் தன்னை நோக்கிக் கைகளை ஓங்கிக்கொண்டு வந்தபோது அரவிந்தன் பதில் தாக்குதலுக்கும், தாக்குதலைச் சமாளிப்பதற்கும், தயாரானானே ஒழிய, அவன் மனம் முரட்டு வெறி கொள்ளவில்லை. இத்தகைய கொடுமைத் தாக்குதல்களுக்கு அந்த முரட்டு வெறி உண்டாகாவிட்டால் வெற்றியில்லை. எமகிங்கரனைப்போல் கைகளை ஓங்கிக் கொண்டு வந்த அந்தப் புண்ணாக்குத் தடியனிடம் மாட்டிக் கொண்டிருந்தால் அரவிந்தனால் போரிட்டுத் தப்பியிருக்க முடியாதுதான்!.

ஆனால் போரிடாமல், புண்படாமல் தப்பிக்க அருமையான சந்தர்ப்பம் வாய்த்தது அரவிந்தனுக்கு. மென்மைக் குணம் படைத்த நல்ல மனிதர்களை அந்த மென்மைக்கு ஊறு நேராமலே தெய்வ சித்தம் காப்பாற்றி விடுகிறது என்பது எத்தனை பொருத்த மான் உண்மை!. தெய்வ சித்தமோ அல்லது தற்செயலான தந்தர்ப்பமோ எப்படிவைத்துக் கொண்டாலும் சரி, அந்தச்சமயத் |ங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அந்த முரடன் அடித்துக் விவிட அரவிந்தனை நெருங்கிக் கொண்டிருந்த இபரிய கார் காம்பவுண்டுக்குள் நுழைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/308&oldid=556031" இலிருந்து மீள்விக்கப்பட்டது