பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 குறிஞ்சி மலர்

எதையோ இரண்டாம் முறையாக நினைத்துக் கொண்டு சிரிக்கிறவன்போல் அரவிந்தன் சிரித்தான். அந்தச் சிரிப்பைப் பூரணி கண்டுகொண்டாள். - -

"எதற்காகச் சிரிக்கிறீர்கள் இப்போது?" என்று கேட்டாள் பூரணி. - 'ஒன்றுமில்லை, பூரணி சற்று முன் நீ சொல்லியதை மறுபடியும் நினைத்துக் கொண்டேன், சிரிப்பு வந்தது. நாம் இருவரும் சேர்ந்து செல்லும்போதெல்லாம் உயரமான இடத்தை நோக்கியே ஏறிச் செல்கிறோம் என்று நீ என்ன அர்த்தத்தில் கூறினாய்?"

'ஏன், நீங்கள் என்ன அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள், அரவிந்தன்?"

'எனக்கு என்னவோ இப்படித் தோன்றுகிறது பூரணி, உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீதான் வெற்றி பெறுவாய். நான் என்றாவது ஒரு நாள் களைப்படைந்து கீழேயே நின்று விடும்படி நேரிடலாம், அப்படி நேரிட்டால் அதற்காக நீ வருத்தப்படக் கூடாது' என்று அவன் சிரித்தபடியே இந்தச் சொற்களைக் கூற முயன்றாலும், கூறும்போது ஏதோ ஒரு விதமான உணர்வின் அழுத்தம் தோய்ந்து தான் ஒலித்தது. அந்த உணர்வின் அழுத்தம் அவனையறியாமலே, அவன் உணர்வு இல்லாமலே அந்தச் சொற்களில் கலந்து விட்டது. எப்படிக் கலந்தது, ஏன் கலந்தது, எதற்காகக் கலந்தது என்பதை அவனே விளங்கிக் கொள்ள இயலாமல் தவித்தான். பூரணி அவனுடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். இமையாமல் பார்த்தாள். மெல்லச் சிரித்துக்கொண்டே பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் தன் சட்டைப் பையிலிருந்து சிறிய நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான்.

'ஏன் இப்படித் தோன்றக் கூட்ாதோ உயரத்தில் ஏறி மேற்செல்லும் இந்தப் போட்டியில் நீங்கள் வெற்றி பெற்று விடுவீர்கள். நான்தான் என்றாவது ஒருநாள் களைப்படைந்து கீழேயே நின்று விடுவேன்' என்று கூறிக்கொண்டே அவன் எழுதிக் கொண்டிருந்த நோட்டுப் புத்தகத்தைச் செல்லமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/322&oldid=556045" இலிருந்து மீள்விக்கப்பட்டது