பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 347

"ஐயா! நீங்க எனக்குப் பணம் கொடுத்தது பெரிசில்லிங்க.... என்னை ரொம்ப கெளரவப் படுத்திட்டீங்க" என்று கொத்தனார் நாத் தழுதழுக்க நன்றியோடு அரவிந்தனிடம் கூறினார். இன்று. இந்த நாட்டில் உழைக்கும் இனம் எங்கும் ஏங்கித் தவிப்பது இந்தக் கெளரவத்திற்காகத்தான். பணத்தினால் மட்டும் உழைக் கிறவர்கள் நிறைவடைவதில்லை. உழைப்பு கெளரவிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதைச் சொல்லப் பல காரணங்களால் அஞ்சித் தயங்குகிறார்கள் என்று அப்போது அரவிந்தன் மனதில் நினைத்துக் கொண்டான். வயது முதிர்ந்த தாய்மார்களும் கிழவர்களும் இளைஞர்களுமாக அந்தக் குடிசைகளில் குடியேற இருந்த மக்கள் அரவிந்தனையும், முருகானந்தத்தையும் நோக்கிக் கண்களில் நீர் மல்கக் கை கூப்பினார்கள். இந்த அன்புக் கண்ணிரும் ஆனந்தக் கைக் கூப்புதல்களும் பூரணிக்குச் சேரவேண்டியவை அல்லவா அவள் இன்று இங்கே நேரில் வந்து இதில் கலந்து கொள்ள் முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும் இரக்கத்துக்கும், அனுதாபத்துக்கும் உரிய மனித வெள்ளத்தினிடையே தீபமேந்திச் செல்வதாகக் கனவுகாணும் அவள் உண்மையிலேயே இன்று இங்கே அதைப் பார்த்திருப்பாள் என்று எண்ணி நெஞ்சுருகி நின்றான் அவன். -

அன்று மாலை அரவிந்தனைப் பொன்னகரத்திலுள்ள தன் வீட்டுக்கு வற்புறுத்தி அழைத்தான் முருகானந்தம். எதற்காக அன்று அவன் தன்னை வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான் என்பது முதலில் அரவிந்தனுக்குத் தெளிவாக விளங்கவில்லை. மாதத்துக்கு ஒருமுறை எப்போதாவது ஒய்வு கிடைக்கிற ஞாயிற்றுக்கிழமையில் அரவிந்தனே பொன்னகரத்துக்குப் போய் நண்பர்களையெல்லாம் பார்த்து நலம் விசாரித்துவிட்டு அளவளாவிப் பேசிவிட்டு முருகானந்தத்தின் வீட்டுக்கும் சென்று அவனுடைய பெற்றோர்களைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு வருவதுண்டு. முருகானந்தத்தின் பெற்றோர்களோடு சிறு வயதிலேருந்தே அரவிந்தனுக்குப் பழக்கமும் பாசமும் உண்டு. அவர்கள் அவனுக்கு உறவில்லையானாலும் அவனுடைய கிராமத்தில் சிறிது காலம் வசித்தவர்கள். பஞ்சத்துக்கு ஊர் மாறின குடும்பமாக அரவிந்தனுடைய கிராமத்தில் அவர்கள் இருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/349&oldid=556072" இலிருந்து மீள்விக்கப்பட்டது