பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 குறிஞ்சி மலர்

ஒருவன். 'என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. நான் பரீட்சையில் தேறாத ஏமாற்றமே காரணம்' என்று சட்டைப் பையில் கடிதம் எழுதி வைத்துக்கொண்டு இரயிலுக்கு முன் விழுந்துவிட்டான். கையும் காலும் துண்டாகி இரத்த வெள்ளத்தில் எடுத்துக் கிடத்தியிருக்கிறது. பார்க்கச் சகிக்கவில்லை."

அடப் பாவமே'

'பாவமாவது, புண்ணியமாவது அரவிந்தன் நம்முடைய பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் வாழ்வதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? அல்லது இம்மாதிரி சாவதற்குச் சொல்லிக் கொடுக்கிறார்களா? வாழும் தைரியத்தைக் கற்பிக்காத கோழைத் தனமான ஏட்டுப் படிப்பு ஒன்று இருக்குமானால் அது இந்த நாட்டுக்கே அவமானம். படிப்பு முயற்சியையும் நம்பிக்கையை யும் தூண்டி, உற்சாகப்படுத்துகிற சஞ்சீவி மருந்தாக இருக்க வேண்டாமோ? வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இது என்ன படிப்பு?”

'இங்கே தான் கல்லூரிகளெல்லாம் விளம்பரப்பலகை மாட்டாத போர்டிங் அண்டு லாட்ஜிங் ஒட்டல்களாக இருக் கின்றனவே அப்பா? வாழ்க்கையிலேயே சோர்வடைந்தவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு வருகிறார்கள். அல்லது ஆசிரியராக வந்தபின் அந்த சோர்வை அடைகிறார்கள். இப்படிச் சோர் வடைந்தவர்கள் கற்பிக்கும் உள்ளங்களில் எப்படி 'வாழும் தைரியம் வளரும்? கவி தாகூரின் விசுவ பாரதி பல்கலைக் கழகத்தையும், சாந்தி நிநேதனத்தையும் போல் மாகாணத்துக்கு ஒரு லட்சியக் கல்லூரியாவது இந்த நாட்டுக்கு வேண்டும். அப்போதுதான் வாழும் தைரியத்தைக் கற்பிக்க முடியம்.'

'சோர்வடைந்தவர்கள் என்று ஆசிரியர்களை மட்டும் குறைசொல்லிப் பயனில்லை, அரவிந்தன் பாரத நாட்டுக்குக் குடியரசு வாழ்வு வந்த பின்னும் ஆசிரியர்கள் பாடு பிடியரிசி வாழ்க்கைதான். எல்லாரும் சேர்ந்து மொத்தமாக மறந்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு மறந்துவிட்ட இனம் ஆசிரியர் இனம்தான். இப்போது இந்தப் பையன் விழுந்து செத்திருக்கிறானே, இதே இரயில்வே லெவல் கிராசிங்கில் பதினைந்து நாளைக்கு முன் நாலைந்து பெண்களுக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/352&oldid=556075" இலிருந்து மீள்விக்கப்பட்டது