பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 குறிஞ்சிமலர்

ஆனால் அப்படி முடியவில்லை. அவன் வெளியேறுகிற நேரம் பார்த்தா அவனைத் தேடிக் கொண்டு வசந்தாவும் முருகானந்தமும் அச்சக வாயிலில் காரில் வந்து இறங்க வேண்டும்? முருகானந்தம் புன்னகையோடு கேட்கலானான்.

'என்ன கோலம் இது. எங்காவது வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறாயா அரவிந்தன்? அவர்களை இரயிலேற்றிவிட்டு நீ இன்று திரும்பியிருப்பாயென எதிர்பார்த்துத்தான் உன்னை இங்கே காண வந்தோம். நீ என்னடா என்றால் மறுபடியும் எங்கோ பயணம் கிளம்பிக் கொண்டிருக்கிறாய்?"

'முருகானந்தம்! இது வெளியூர்ப் பயணம் அல்ல! என்னுடைய வாழ்க்கைப் பயணம்' என்று சொல்லி மெல்லச் சிரித்தான் அரவிந்தன். இடுக்கண் வருங்கால் நகுக' என்றுதானே அவனுடைய திருக்குறள் சொல்லுகிறது. ஆனாலும் தான் சிரித்த சிரிப்பு அப்போது முழுமையாக இருந்திருக்க முடியுமென்பதில் அவனுக்கே நம்பிக்கை ஏற்படவில்லை.

'விளங்கும்படியாகச் சொல். அரவிந்தன் எனக்குப் புரிய வில்லை' என்றான் முருகானந்தம். அதற்கு மேலும் உண்மையை மறைக்க முடியவில்லை அரவிந்தனுக்கு.

'இன்னும் எப்படியப்பா விளக்குவது? பதவுரை, பொழிப் புரை சொல்ல வேண்டுமா என்ன? இந்த மீனாட்சி அச்சகத்தை, மீனாட்சி சுந்தரத்தின் மாப்பிள்ளை இருவரிடமும் ஒப்படைத்தா யிற்று. எனக்கும் இதற்கும் இனியொரு தொடர்பும் இல்லை. எனக்கும் இந்தப் பயல் திருநாவுக்கரசுக்கும் தங்கிக்கொள்ள இடம் தேடிப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன் நான். மங்கம்மாள் சத்திரத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு விடுதியிலோ இரண்டு மூன்று நாட்கள் தங்கிக்கொண்டு அப்புறம் வேறு இடம் பார்க்கலாமென நினைக்கிறேன்."

'நன்றி கெட்ட உலகம்' என்று கறுவினான் முருகானந்தம். அரவிந்தனுக்கு இப்படி நடக்குமென்று நினைத்துப் பார்க்கவே முருகானந்தத்துக்கு வேதனையாயிருந்தது.

'ஒரு சத்திரத்துக்கும் போக வேண்டாம். நம் வீடு எங்கே போயிற்று? மாடியில் எல்லா அறையும் காலிதான். நீங்கள் நம் வீட்டுக்குத்தான் வரவேண்டும். பூரணியக்காவிடமே திருப்பரங் குன்றம் வீட்டை ஒழித்துக் கொண்டு நம் வீட்டோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/428&oldid=556151" இலிருந்து மீள்விக்கப்பட்டது