பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/450

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 குறிஞ்சிமலர் இருப்பதுபோல் தனக்குத் தோன்றியதை நினைத்துக் கொண்டாள் பூரணி. அவளுக்கு உடனே அரவிந்தனைச் சந்திக்கவேண்டும்போல் இருந்தது. தானே அரவிந்தன் சென்றிருக்கும் அந்தக் கிராமத்துக்குப் புறப்படத் தயாரானாள் அவள். 'வேண்டாம் அக்கா? இரண்டு மூன்று நாட்களில் அரவிந்தனே திரும்பி விடுவான். பார்த்துக்கொண்டு, வரவில்லையானால் அப்புறம் அவசியம் அவனை நான் போய்க் கூட்டி வருகிறேன்' என்று பூரணியைத் தடுத்து விட்டான் முருகானந்தம். ஆனால் அதற்குப்பின் ஒரு வாரம் கழித்தும் அரவிந்தனைப் பற்றித் தகவலேதும் தெரியவில்லை. பூரணியின் மனம் இனம் புரியாக் கவலைகளால் வருந்தலாயிற்று

36

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணிரதனால் உடம்பு நனைந்து நனைந்து. கிராமத்துக்குச் சென்ற அரவிந்தன் என்ன ஆனான் என்ற விபரமே தெரியாமல் பூரணி, மங்களேசுவரி அம்மாள், வசந்தா எல்லோரும் கவலைப்பட்டு மனம் தவித்துக் கொண்டிருந்த போது, முருகானந்தம் மட்டும் அதைப் பற்றிய நினைவே இல்லாதவன் போல் தேர்தலில் பூரணிக்கு ஆதரவு தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்படி அவன் அலைவதற்காக வழக்கம்போல் அன்று காலையிலும் அவசரமாக வெளியில் கிளம்பியபோது வசந்தா சீற்றத்தோடு வந்து வழி மறித்துக்கொண்டாள்.

'நீங்கள் செய்வது உங்களுக்கே நன்றாயிருக்கிறதா? எதற்கு இப்படி வீட்டு நினைவில்லாமல் அலைந்து திரிகிறீர்கள்? அக்கா இரவிலிருந்து சாப்பிடுவதையே நிறுத்தி விட்டார். அறைக்குள்ளேயே அழுது கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நீங்கள் அந்தக் கிராமத்துக்குப் போய் அரவிந்தன் அண்ணனை எங்கிருந்தாலும் தேடிக் கூட்டிக் கொண்டு வந்து விட்டு மறுவேலை பாருங்கள். அக்கா அங்கே போகிறேன் என்றாலும் போகவிடாமல் தடுத்துவிட்டு, நீங்களும் போகாமல் இருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/450&oldid=556173" இலிருந்து மீள்விக்கப்பட்டது