பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 65 விழுந்தாய். உன்னை என் காரிலேயே எங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டேன். இப்போது நீ எங்கள் வீட்டில் இருக்கிறாய். கீழே விழுந்த்தற்கு அதிகமாக ஆண்டவன் புண்ணியத்தில் உனக்கு வேறெந்த விபத்தும் ஏற்படவில்லை. கவலைப்படவோ, பயப்படவோ வேண்டாம்.'

தெருவில் வந்து கொண்டிருந்த போது தனக்கு நேர்ந்ததைப் பற்றி அந்த அம்மா கூறியதைக் கேட்க வெட்கமாக இருந்தது பூரணிக்கு. என்ன நடந்தது என்பதை அந்த அம்மாள் கூறி விளக்கிய பின்புதான் அவளுக்கு ஒருவாறு புரிந்தது. நாத் தழு தழுக்க அந்த அம்மாளுக்கு நன்றி சொல்லத் தொடங் கினாள்.

'உங்களுக்கு எப்படி எந்த வார்த்தைகளால் நன்றி சொல்லப்போகிறேன்? தாயைப் போல் வந்து என்னைக் காப்பாற்றி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள்..."

'நன்றி இருக்கட்டும்; காரும் வண்டியும் கூட்டமுமாக ஒரே நெருக்கடியாயிருக்கிற நாற்சந்தியில் அப்படித்தான் பராக்குப் பார்த்துக் கொண்டு நடப்பதா பெண்னே? நல்ல வேளையும் நல்வினையும் உன் பக்கம் இருந்து காப்பாற்றி இருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். மயிரிழையில் தப்பிப் பிழைத்திருக்கிறாய்!'

'இந்த விபத்தில் தப்பிவிட்ட்ேன். நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள். இதைவிடப் பெரிய விபத்து ஒன்று இருக்கிறது. ஒவ்வொருவரும் விரும்பியோ, விரும்பாமலோ அடைகிற விபத்து அது!"

'நீ என்ன சொல்கிறாய்? எதைப் பற்றிச் சொல்கிறாய்?" 'வாழ்க்கையைப் பற்றிச் சொல்கிறேன்! அதுவும் ஒரு விபத்தாகத்தான் எனக்குப் படுகிறது."

இதைக் கேட்டு அந்த அம்மாள் சிரித்தாள். தும்பைப் பூச்சரம் போல் தூய்மைக் கீற்றாய்த் தோன்றி மறைந்தது அந்த நகை. ஒழுங்காய் அமைந்த வெண் பல்வரிசை அந்த அம்மாளுக்கு.

'இந்த வயதில் இப்படி நூற்றுக் கிழவி போல் எங்கே பேசக் கற்றுக் கொண்டாய் நீ!'

கு ம - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/67&oldid=555791" இலிருந்து மீள்விக்கப்பட்டது