பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 77

காரிலிருந்து இறங்க விரும்பவில்லை அவள். வீதி முகப்பில் மயில் மண்டபத்துக்கு அருகிலேயே இறங்கிக் கொண்டு விட்டாள். 'அம்மா வீட்டைப் பார்த்துகொண்டு வரச் சொன்னாங் களே' என்றான் டிரைவர். அவனுக்கு அங்கே நின்றே தன் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு நடந்தாள் பூரணி. கார் திரும்பிப் போயிற்று. வீட்டு வாசலுக்கு வந்தவள் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு திகைத்தாள்.

6

நிலவைப் பிடித்துச் சிறு கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதிந்த முகம், நினைவைப் பதித்து-மன அலைகள் நிறைத்துச் - சிறுநளினம் தெளித்த விழி. பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்த போது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையில் வாசகர்களும் தான் அநுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும் துடித்திருக்கிறது! வெறும் மனிதர்கள் வாழுகிற தலைமுறையின் துன்பத்தைக் கண்டு கொதித்திட ஒரு கவியுள்ளமா? நியூஸ் ரிப்போர்ட்டர்கள் வாழும் நூற்றாண்டு அல்லவா இது? நடுத் தெருவில் பெண் மயங்கி விழுந்தாள்' - என்று நியூஸ் எழுதலாம். கவி எழுதத் துடித்த அந்த உள்ளம் யாருடையது? கைகள் யாருடையவை? அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறதல்லவா? ஆச்சரியகரமான அந்த இளைஞனைச் சந்திக்கலாம் வாருங்கள்.

அதோ, அந்த நாற்சந்திக்கு மிக அருகில் கிழக்கைப் பார்த்த வாயில் அமைந்த அச்சாபீஸ் ஒன்று தெரிகிறதே; அதற்குள் நுழைந்து அங்கே நடப்பதைக் கவனிக்கலாம்.

'மீனாட்சி அச்சகம் - எல்லா விதமான அச்சு வேலைகளும் ஏற்றுக் கொள்ளப்படும். குறித்த நேரம் குறைந்த செலவு என்று பெரிய விளம்பரப் பலகை வெளியே தொங்குகிறது. அப்போது சரியான பிற்பகல் நேரம். அச்சகத்து முகப்பு அறையைத் தெருவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/79&oldid=555803" இலிருந்து மீள்விக்கப்பட்டது