பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 81. எழுதியிருந்த கவிதைகளைத் தானே ஒருமுறை கள்ளத்தனமாக இரசித்துவிடும் ஆவலுடன் அவசர அவசரமாக நோட்டைப் பிரித்தான் அரவிந்தன். 'நிலவைப் பிடித்து' என்று தொடங்கிய முதல் இரண்டு வரிகளை மனத்துக்குள்ளேயே விரைவாகப் படித்த பின் மற்ற வரிகளைச் சத்தத்தோடு வாய்விட்டுப் படிக்கத் தொடங்கினான்.

'தரளம் மிடைந்து- ஒளி தவமுக் குடைந்து இரு பவழம் பதித்த இதழ் முகிலைப் பிடித்துச் சிறு நெளியைக் கடைந்து - இரு செவியில் திரிந்த குழல் அமுதம் கடைந்து சுவை அளவிற் கலந்து - மதன் நுகரப் படைத்த எழில்' படித்துக் கொண்டே வரும்போது, அந்தப் பெண்ணின், முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்ன நடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுள் மறையாக் காட்சிகளாய் நின்றன. அசை போடுவது போல் பாட்டை மறுபடியும் மறுபடியும் சொல்லி இன்புற்றான். 'நான் கூட நன்றாகத் தான் பாடியிருக்கிறேன்! என்ன சந்தம், என்ன பொருளழகு என்று தனக்கு தானே பெருமையாகச் சொல்லிக் கொண்டான். அதற்குள் முதலாளியின் அதிகாரக் குரல் அவனை விரட்டியது. நோட்டுப் புத்தகத்தை ஒளித்து வைத்து விட்டு உள்ளே ஓடினான். -

'ஏம்பா அரவிந்தா? அந்த நாவல் புத்தகம் ஒண்ணு வேலை செய்ய எடுத்துக் கொண்டோமே அயோக்கியன் எழுதிய அழகப்பனின் மர்மங்கள் என்று..."

சார் சார் தப்பு - அழகப்பன் எழுதிய அயோக்கியனின் மர்மங்கள் என்பதுதான் சரியான தலைப்பு-" ---

'ஏதோ ஒரு குட்டிச் சுவரு... அது எத்தனை பாரம் முடித்திருக்கிறது?"

கு ம - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/83&oldid=555807" இலிருந்து மீள்விக்கப்பட்டது