பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 - குறிஞ்சி மலர் களெல்லாம் அவன் முகத்தில் தான் ஆவலோடு பதிய முடியும். அரவிந்தனுக்குப் பிடிக்காதவை காலர் வைத்த ஆடம்பரமான சட்டைகள் அணிவதும் எட்டு முழம் வேட்டி கட்டுவதும். எளிமையை எல்லாவற்றிலும் விரும்புகிற சுபாவமுள்ளவன் அவன். தமிழ் நாட்டுச் சூழ்நிலையே எளிமைக்கு ஏற்றது என்று வாதாடுவான்.

'இது ஏழைகளின் தேசம். இங்கே ஒவ்வொருவரும் குறை வான வசதிகளை அனுபவிப்பதோடு மற்றவர்களுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டும்' என்று அடிக்கடி புன்னகையோடு கூறுவான் அரவிந்தன். காந்தியக் கொள்கை களைப் போற்றுவதில் விருப்பமும் மதிப்பும் கொண்டிருந்தான் அரவிந்தன். கைப்பிடிக்குள் அடங்கி விடுகிறாற் போல் ஒரு சின்னஞ்சிறு திருக்குறள் புத்தகம் எப்போதும் அவனுடைய சட்டைப் பையில் இருக்கும்.

'அரவிந்தா இப்படி வா. உன்னிடம் கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும்' என்று அவனை அன்போடு முன்னறைக்கு அழைத்துக் கொண்டு சென்றார், அச்சக உரிமையாளர் மீனாட்சிசுந்தரம்.

உள்ளே அழைத்துக் கொண்டு போய் அவனை உட்காரச் செய்து தம் திட்டத்தை விவரித்தார். விளையாட்டுப் பிள்ளை போல் தோன்றினாலும் அவனுடைய திறமையில் அவருக்கு அசையாத நம்பிக்கை. அவனைக் கலந்து கொள்ளாமல் எதுவும் செய்ய மாட்டார். அவர் அன்று கூறிய புதுத் திட்டத்தை அரவிந்தன் முழு மனத்தோடு வரவேற்று ஒப்புக் கொண்டான்.

நிச்சயமாக இந்தத் திட்டம் நமக்கும் பயன்படும்; நாட்டுக்கும் பயன்படும். சிறந்த தமிழ் அறிஞர்கள் நூல்களை மலிவான விலையில் வெளியிட்டுப் பரப்ப வேண்டியது அவசியம்தான். சாமர்த்தியமாக வெளியிட்டு விற்றால் நமக்குக் கைப்பிடிப்பு இருக்காது."

'அப்படியானால் முதலில் இதோ இந்த முகவரிக்குப் போய் உரியவர்களைப் பார்த்து ஆக வேண்டிய காரியங்களை ஏற்பாடு செய்து பேசிவிட்டுவா!' என்று முகவரியை நீட்டினார் e9/6lIT.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/88&oldid=555812" இலிருந்து மீள்விக்கப்பட்டது