பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 125

“எப்போ ? அதான் போய்விட்டாரே !’ வருவார்’ ‘ வராமலே இருந்துவிட்டால் நான் என்ன செய்வேன் ?” * இருக்க மாட்டார்’ ‘ஊர் முழுதும் அலராகி விடுமே. வம்பும் தும்பும் அதிக மாகுமே!’

‘iணுக ஏன் கவலைப் படுகிறாய்? மொட்டு மலர்வதன் முன்பே வண்டு வாய் வைத்து ஊதுகிறது அவனுடைய மலைநாட் டிலே. வண்டின் குணம் அவனுக்கு இல்லாமலா போகும்? ஊரில் அலராகு முன்பே அவன் உன்னே மணமுடிப்பான்’

  • உனக்கு எப்படித் தெரியும் ?’’ ‘அவன் பொருட்டு நீ படும் துயரத்தைச் சொன்னேன். கேட்டான். மிக வருந்தின்ை ; வெட்கப்பட்டான். என் பொருட்டு வருந்துவதா? என் காதலி வருந்த விடலாமா? சரி. விரைவிலே வருவேன். மணம் புரிவேன்’ என்று கூறிப் போயிருக்கிருன். அதனுல்தான் வருந்தாதே என்கிறேன்.;வருவான் என்கிறேன்:

காந்தள் அம் கொழு முகை, காவல்செல்லாது, வண்டு வாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றாேர்க் கண்ட கடன் அறி மாக்கள் போல, இடன் விட்டு, இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் நன்னர் நெஞ்சத்தன் - தோழி! - நின் நிலை யான் தனக்கு உரைத்தனென்.ஆக, தான் நாணினன், இஃது ஆகாவாறே.

-கருவூர்க் கதப்பிள்ளை

100. வா எனவும் முடியாது ; போ எனவும் இயலாது

“காதலர் வருகிறார். இரவு நேரத்திலே வருகிறார். வரும் வழியோ மிகவும் பயங்கரமானது. அவற்றையெல்லாம் பொருட் படுத்தாது வருகிறார். இன்பமாக இருக்கிறார் எனக்கும் அது இன்பமாகத்தான் இருக்கிறது. பிறகு புறப்படுகிரு.ர்.