பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 குறுங் தொ ைக க்

இரவிலே வந்தபோது மாத்திரம் மகிழ்ந்தாய். இப்போது மணம் புரிய வேண்டிப் போயிருக்கிருன். துன்புறுகிறாய். ரொம்ப கன்றா யிருக்கிறது’ என்றாள். கறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை உறை அறு மையின் போகி, சாரல் குறவர் பாக்கத்து இழிதரும் காடன் மயங்கு மலர்க் கோதை கல் மார்பு முயங்கல் இனிதுமன் வாழி - தோழி ! - மா இதழ்க் குவளே உண்கண் கலுழப் பசலே ஆகா ஊங்கலங்கடையே.

-பேயார்

123. மேனி காட்டுதே! மோகம் வாட்டுதே !

கட்டழகி ஒருத்தி. அவளேக் கண்டான் ஒரு காளே. காதல் கொண்டான். மெதுவாகத் தோழியிடம் சென்றான். தனது காத லேத் தெரிவித்தான். கேட்டாள் அவள்.

“அவள் சிறு பெண்ணுயிற்றே. பருவம் வராதவளாயிற்றே. அவள்மீது காதல் கொண்டேன் என்கிருயே. இன்பமாயிருக்க வேண்டும் என்கிருயே!’ என்று கூறிச் சிரித்தாள்.

கேட்டான் அவன். “அப்படி ஒன்றுமில்லை. நீ சொல்கிறபடி அவள் ஒன்றும் அறியாத பெண் அல்ல. பருவம் வந்தவள் என்பதை அவளது மேனி காட்டுகிறது. அதல்ைதான் அது என்னை வாட்டுகிறது. ஆனல் அது அவளுக்குத் தெரியவில்லை’ என்றான். முலேயே முகிழ்முகிழ்த்தனவே, தலையே கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே; செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின; சுணங்கும் சில தோன்றினவே; அணங்கு என யான் தன் அறிவல்; தான் அறியலனே ; யாங்கு ஆகுவள்கொல் தானே - பெரு முது செல்வர் ஒரு மட மகளே?

-பொதுக் கயத்துக் கீரந்தை