பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 48 கு று ங் .ெ த ா ைக க்

அவனது வரவை எதிர்பார்த்து இருந்தாள் அவள். பிரிவு தாங்க முடியவில்லே. வருந்தினுள்.

‘வருந்தாதே’ என் ருள் தோழி. ‘வருவாரோ ?’ என்றாள் அவள்.

வருவார்’ என்றாள் தோழி. ‘அவனது மலை நாட்டிலே உள்ள மரையா என்ன செய்யும் ? புளிப்பான கெல்லிக் கனியைத் தின்னும். பிறகு சுனே நீரைத் தேடிச் செல்லும். மூச்சு விடும். சுனேயிலே படிந்துள்ள மலர்கள் விலகும். நீரைக் குடிக்கும்,” என்றாள்.

அந்த மாதிரி ?” ‘அந்த மாதிரி அவன் வருவான். துன்பமாகிய பிரிவி னின்றும் உன்னைத் தேடி வருவான். சுனே நீராகிய உன்னே. உன்னேச் சுற்றி வம்பு பேசுகிறார்களே இவர்கள் வாயடைத்து விலகுவார்கள். உ ன் னே மணந்து இன்பம் துய்ப்பான்’ என் ருள். புரி மட மரையான் கரு கரை நல் ஏறு திம் புளி நெல்லி மாந்தி, அயலது தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து, ஓங்கு மலேப் பைஞ் சுனே பருகும் நாடன் நம்மை விட்டு அமையுமோ மற்றே. கைம்மிக வட புல வாடைக்கு அழி மழை தென் புலம் படரும் தண் பணி நாளே !

-மதுரைக் கண்டரதத்தன்

132. கதிரவனும் காதலனும்

காதலன் வெளியூர் செல்கிருன். பொருள் தேடுவதற் காக. அவன் வரும்வரையில் நீ எப்படிப் பொறுத்திருப்பாய் ?” என்று கேட்டாள் தோழி.

‘இருப்பேன்’ என்றாள் அவள். ‘மதி அவன். கடல் நான். மலே அவன். அருவி நான். சூரியன் அவன். சூரியகாந்தி மலர் நான்’ என் ருள்.