பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 கு று ங் தொ ைக க்

வையை அடிக்கொரு முறை கூவி அழைக்கிறது. அப்படி அன்றில் அழைக்கும் குரல் அவளது காதிலே வந்து விழுகிறது.

காதலனே நினைத்துக் கொண்டே இருக்கிருள். காதலன் வருவது போல் தோன்றுகிறது அவளுக்கு. அவனது தேரிலே கட்டிய மணி ஒலிப்பது போல் தோன்றுகிறது. விழித்துக் கொண்டு பார்க்கிருள். ஆனல் காதலன் வரவில்லை. தூக்கமும் வரவில்லே.

இரவு முழுதும் தான் பட்ட அவதியைச் சொல்கிருள் தனது தோழியிடம்.

முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக் கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக் கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல் x வயவுப் பெடை அகவும் பானுட் கங்குல், மன்றம் போழும் இன் மணி நெடுங் தேர் வாராது ஆயினும், வருவது போலச் செவிமுதல் இசைக்கும் அரவமொடு துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.

-குன்றியன்

137. புவனமே வரினும் பிரியேன்

‘அன்பே’ என் ருன்.

“இன்பமே” என்றாள்.

தேனே’ என்றான்.

‘திரவியமே” என்றாள்.

பிரியேன்” என்றான்.
பிரிந்தால் உயிர் தரியேன்” என்றாள்.

அவளுடைய முகத்திலே வியர்வை அரும்பியது. கண்களில் கலக்கம் காட்சியளித்தது. நெஞ்சு பட பட’ என்று துடித்தது. கை பிடித்த காதலன் கை விடுவானே என்று அஞ்சிள்ை.

கண்டான் அவன். அவளது கூந்தலேத் தடவினன். முகத் தைத் துடைத்தான்.