பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 191

என்ன செய்தாய்? அவரைத் தடுத்து நிறுத்த . எல்லாரையும் போலவே வந்து எனக்குச் சேதி சொல்கிருயே!” என்று சிறிள்ை அவள்.

‘செப்பினம் செலினே செலவு அறிது ஆகும் என்று அத்த ஒமை அம் கவட்டு இருந்த இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி, நல் அடி பொறிப்பத் தா அய்ச் சென்றெனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே. •

-உறையன

174. வேனில் வந்தது வேதனை தந்தது!

‘வருந்தாதே! வருந்தாதே! என்று சொல்கிருயே! நான் எப்படி வருந்தாமல் இருப்பேன்? அதோ பார், குயில் கூவுது. மா மணக்கிறது. இளவேனில் வந்துவிட்டது. அவரோ வரவில்லை. ஏன் கூந்தலையும் சிவி முடியவில்லை. எப்படி வருந்தாமல் இருப் பேன்?’ என்கிருள் அவள். காதலனைப் பிரிந்த காதலி.

‘ஈங்கே வருவர், இனையல், அவர் என, அழா அற்கோ இனியே?-நோய் நொந்து உறைவிமின்னின் தூவி இருங் குயில், பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப, மாச் சினை கறுங் தாது கொழுதும் பொழுதும், வறுங் குரற் கூந்தல் தைவருவேனே.

-கச்சிப்பேட்டு நன்னகையார்


175. தேரும் தெளிவும்

அரசனது கட்ட&ளயை கிறைவேற்றுவதற்காக வேற்றுTர் செல்கிருன் அவன். மனமோ காதலியை நாடுகிறது. பிரிய மனம் வரவில்லை.