பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 கு று ங் தொ ைக க்

தாங்கும் அளவைத் தாங்கி, காமம் நெரிதரக் கைங் நில்லாதே.

-வெள்ளிவீதியார்

182. இன்பக் கனவு

j

பொருள் தேடுவதற்காகப் போயிருக்கிருன் அவன். போன இடத்திலே காதலியின் நினைவு வந்து வாட்டுகிறது. அவளே மறக்க முடியவில்லை அவல்ை.

தூக்கத்திலே அவளேக் கண்டான். கட்டியணைப்பது போன்ற கனவு. பொக் கென்று விழித்தான், காதலியைக் காணுேம். கனவு. அந்த இன்பக் கனவை வாழ்த்துகிருன். ‘கனவே! உன்னே யாரே இகழ்வார் ?’ என்கிருன்.

வேனிற் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை, நுண் பூண், மடங்தையைத் தந்தோய் போல, இன் துயில் எடுப்புதி. கனவே! - எள்ளார் அம்ம, துணைப் பிரிந்தோரே.

-கோப்பெருஞ்சோழன்

183. பட்சி பறந்து விட்டது!

“அவள் எங்கே ?”

காணுேமே !’ ‘கழியிடத்திலே மலர் பறித்துக் கொண்டிருக்கிருளோ, பார்”

‘பார்த்துவிட்டேன். இல்லை’

தோழிமாருடன் கடலிலே நீந்தி விளையாடுகிருளோ ?”

‘அங்கும் இல்லையே’

பின் எங்கே போளுள் ?”

‘இவை ஒன்றும் அவளுக்குப் பிடிக்கவில்லை”

“பிடித்தது எது ?”