பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 கு று க் .ெ தா ைக க்

அதை நினைக்கும்போது நெஞ்சு பகீரென்கிறதே! என்ன செய் வேன்?’ என்று புலம்புகிருள் அவள். எல்லே கழிய, முல்லை மலர, கதிர் சினம் தணிந்த கையறு மாலை, உயிர் வரம்பாக நீந்தினம் ஆயின், எவன்கொல் வாழி ? - தோழி! - கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே !

-கங்குல் வெள்ளத்தார்

282. மறைந்த குன்றும் கவிழ்ந்த கலமும் !

வாடை வந்துவிட்டது. முல்லே மலர்கிறது. மாலை நேரம். அந்தக் குன்றினேயே பார்த்துக் கொண்டிருக்கிருள் அவள். ஏன்? அது அவளது காதலனின் குன்று. அவனே அவளைப் பிரிந்து சென் றிருக்கிருன்; பொருள் தேட. அந்த மலேயைப் பார்க்கும்போது அவனைப் பார்க்கும் எண்ணம் அவளுக்கு. மாலை நேரத்திலே கதிரவன் மலே வாயில் விழுகிருன். இருள் வந்துவிடுகிறது. குன்றும் மறைகிறது கண்ணுக்குத் தெரியாமல். கடலிலே மரக் கலம் தோன்றி அமிழ்வதுபோல் இருக்கிறது அவளுக்கு. கப்பல் கவிழ்ந்தது போன்ற துயரம்.

‘அந்த மலே கண்டு மனம் தேறினேன். அதுவும் மறைந்ததே. கடலில் கப்பல் ஆழ்ந்தது போல’ என்றாள் அவள்.

பனிப் புதல் இவர்ந்த பைங் கொடி அவரைக் கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் வெருக்குப் பல் உருவின் முல்லையொடு களுலி, வாடை வந்ததன் தலையும், நோய் பொர, கண்டிசின் வாழி - தோழி! - தெண் திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி, மாலை மறையும், அவர் மணி நெடுங் குன்றே.

- -கொல்லன் அழிசி

முல்லைத் தொகை முற்றும்.