பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 குறுங் தொ ைக க்

வயலுக்குக் களை கட்டுவது, நெல் அரிவது, கடா விடுவது, குளம் தோண்டுவது-இவை அவர்தம் தொழில்.

புது நீர் நீந்தி விளையாடுவது அவருடைய பொழுது போக்கு; விகளயாட்டு.

283. அவள் அழைத்தாள் அவன் நாணினுன் !

ஆடல் மகளிர் வீடே கதி என்று கிடக்கிருன் அவன். அவன மனைவி என்ன செய்தாள்? மிக வருந்தினள். வாடினள். எனி னும், தனது துயரை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. வீட்டிலே செய்ய வேண்டிய விழாக்களே நிறுத்தவில்லே. எல்லாவற்றையும் செய்தாள். அவன் இருந்தால் எப்படி குடும்பம் நடக்குமோ அப் படியே செய்தாள். குடும்ப வரவு செலவுகளை எல்லாம் கவனித்தாள்.

ஒரு நாள் அவன் வந்தான். அவள் என்ன செய்தாள்? கோபித்தாளா? விரட்டினுளா ? (வராதே’ என்றாளா? இல்லை. வரவேற்றாள். முகம் மலர்ந்து வரவேற்றாள். அது கண்டான் அவன். நாணங்கொண்டான். தாங்க முடியாத நாணம். அவன் காணும்படி செய்தது. எது? அவள் மகிழ்ச்சியுடன் வரவேற்றது. இந்த நிகழ்ச்சியை மிக அருமையாகச் சொல்கிறார் கவி.

யாய் ஆகியளே! விழவு முதலாட்டி பயறு போல் இணர பைந்தாது படீயர் உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் காஞ்சி ஊரன் கொடுமை கரங்தனள் ஆகலின் நாணிய வருமே.

-ஓரம்போகியா

284. ஆடும் மகனும்ஆடும் மகளும் !

‘ஏன் வருந்துகிறாய் ?” என்ன செய்வேன்? எனக்குக் கலியாணம் செய்யப் போகி ருர்களாமே !’