பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 299

ருக்கிருன். திரும்பி வரமாட்டான? வந்து விடுவான். எனவே, அவன் வரும் வரையில் குடும்ப வேலைகளைக் கவனிப்போம்” என்றாள்.

இது மற்று-எவனே . தோழி! - துனியிடை இன்னர் என்னும் இன்னக் கிளவிஇரு மருப்பு எரும்ை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது, பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் திரு மனப் பல் கடம் பூண்ட பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?

டகிள்ளிமங்கலங்கிழார்

316. அல்லிக் குளமும் அடங்காத தாகமும்

புதுக் குடித்தனம். கணவனும் மனைவியும் ஆனந்தமாக வாழ் கின்றனர். முன்பு களவுக் காதல் செய்த காலத்திலே உதவியா யிருந்த தோழி வந்தாள். இவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்க்க.

‘அல்லிக்குளத்திலே இறங்கி மலர் பறிப்போர், தாகம் தாகம் என்று தவித்துத் தண்ணிரை அள்ளி அள்ளிக் குடிப்பது போலி ருக்கே’’ என்றாள்.

‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டான் அவன்.

‘அந்த மாதிரி நீ சதா காலமும் மோகம் கொண்டு இருக் கிருயே. உன் அருமைக் காதலி அருகில் இருக்கிருள். அல்லிக் குளத்து நீரை அள்ளி அள்ளிக் குடிக்கிறாய். அப்படியும் தாகம் அடங்கவில்லையே!” என்றாள்.

அவன் சிரித்தான்.

‘அடேயப்பா ! உனக்கு இவ்வளவு ஆசையிருக்கும் என்று அப்போது தெரியவில்லை’ என்றாள்.

‘எப்போது?’ என்றான்.

‘'என்றாே ஒரு நாள் கார்த்திகைப் பிறை மாதிரி காதலியைக்