பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 3 15

அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலராகுதல் கோம் என் நெஞ்சே.

-காமஞ்சேர் குளத்தார்

335. இதுதானே காதல்!

சின்னஞ் சிறு வயது. ஆனல் குழந்தை அல்லள். வயது வரப் பெற்றவளே. காதல் இன்பத்திற்குப் புதியவள். அவ்வளவே!

அவனும் காதலித்தான்; அவளும் காதலித்தாள். உள்ளம் இரண்டும் ஒன்று ஆயின. சிலநாள் இன்பம். பிறகு அவன் சென் ருன். அவனே-செல்வச் சீமான் வீட்டுப் பிள்ளை; கெய் தல் நிலத்திலே உள்ள ஒரு பெரிய மரக்காயர் மகன். அவனது ஊரிலே ஏராளமான புன்னை மரங்கள் உண்டு.

அந்த மரங்களிலே குருகு வந்து தங்கும்; உறங்கும். ஓயாது அலே வீசும். அத்தகைய நெய்தல் கில இளைஞன். ‘விரைவில் வருவேன்’ என்று சொல்லிப் போனன்.

அவள் அவனையே எதிர்நோக்கினுள்; வழிமேல் விழி வைத்து கின்றாள். ஆனல் அவன் வரவில்லை. ஒரு நாளல்ல ; பல நாட்கள் இப்படியே சென்றன.

உணவு செல்லவில்லே அவளுக்கு, உறக்கம் கொள்ள வில்லை. துன்புற்று வாடினள்.

‘ஐயோ ! என்னுல் தாங்க முடியவில்லேயே காம நோய் என்று சொல்கிறார்களே! அது இப்படித்தான் இருக்குமோ தோழி’ என்று கேட்கிருள் தோழியை நோக்கி.

அந்த இளம் உள்ளம்தான் எத்தகைய மாசு மருவற்றது ! அந்த உள்ளத்தில் இருந்து எத்தகைய ஏக்கம் எதிரொலி செய் கிறது சூது வாது இல்லாத பெண். காதலனைப் பிரிந்து அவள் படும் பாட்டைச் சில வரிகளிலே நம் முன் எழுதிக் காட்டுகிறார் கவி. அந்தச் சொற்கள்தான் எப்படி நம் உள்ளத்தைத் தொடு கின்றன !