பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 321

‘என்ன செய்வேன் தோழி, அவர் வரவில்லையே வாடை யும் வந்து விட்டது. காரையும் மீன் தேடுவதை விட்டது. ஆனல் அவரோ பொருள் தேடுவதை விட்டு என்பால் வரவில்லையே. இவ்வளவு நாள் ஆற்றியிருந்தேன். இந்தக் குளிர் காலத்திலே அவர் இல்லாமல் எப்படிப் பொறுத்திருப்பேன் 1 முடியாது l முடி யாது! இனி ஒரு கணமும் உயிர் த்ரியேன் ! என் உயிர் போய் விடும் போலிருக்கே.”

கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல், கவிர் இதழ் அன்ன தூவிச் செவ் வாய், இரை தேர் காரைக்கு எவ்வம் ஆகத் தூஉம் துவலேத் துயர் கூர் வாடையும் வாரார் போல்வர், நம் காதலர்; வாழேன் போல்வல் - தோழி! - யானே.

-வாயிலான் தேவன்

343. சேர்ப்பா ! சேரப்பா !

கடல் நாட்டைச் சேர்ந்த பெரும் செல்வன் ஒருவன்; மீன வன். இருல் மீன், வற்றாது வந்து குவியும் பெரும் திரை நாடன். ஒருத்தியைக் காதலித்தான். அவளும் அவனேக் காதலித்தாள். களவு ஒழுக்கம் நடக்கிறது. இருப்பினும் அவள் மேனி பசலை படர்ந்தது. அது கண்டாள் தோழி. கேட்கிருள் :

எஉன் மேனி பசலை படரக் காரணம் என்ன ? அவர்தான் வந்து போய்க் கொண்டிருக்கிருரே” என்றாள்.

வருவதும் போவதுமாகத்தானே இருக்கிறார். பிரியாமல் இருக்க வில்லையே’

அதாவது என்ன ? விரைவிலே மணம் செய்துகொள்ள வேண்டுமாம். அதை இப்படிச் சுற்றி வ8ளத்துச் சொல்கிருள்.

முட் கால் இறவின் முடங்கு புறப் பெருங் கிளை புணரி இகுதிரை தரூஉம் துறைவன்

21