பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 கு று க் .ெ தா ைக க்

‘தேர் ஏறி வந்தான் உனக் காண்பதற்கு. நீ இணங்க வில்லை. காமம் என்ன ? சாமானியப்பட்டதா? பாவம். திரும்பி விட்டான். வெட்கப்படுகிறேன். வருந்துகிறேன்.” கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுங் தேர் தெண் கடல் அடைகரைத் தெளிர்மணி ஒலிப்ப, காண வந்து, காணப் பெயரும்; அளிதோ தானே, காமம்; விளிவதுமன்ற; கோகோ யானே.

- நெய்தற் கார்க்கியன்

361. ஆசையும் பசலையும்

நெய்தல் காட்டு இளம் செல்வன் ஒருவன். அவள் மீது காதல் கொண்டான். வருவேன்’ என்று சொல்லிப் பிரிந்தான். கடல் ஒரமாகச் சென்றது அவனது வெண் தேர். அலைகள் எழுப்பிய துவலையால் நனைந்து சென்றது அது எப்படியிருந்தது? அன்னம் சிறகு விரித்துப் பறப்பது போல் இருந்தது. அவளது மேனியிலே பசலே படர்ந்தது.

‘இதோ பார் பசலே படர்ந்து விட்டது. இது எப்படி அறிக் ததோ?’ என்றாள் அவள். மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவங்தாங்கு, பொலம்படைப் பொலிந்த வெண் தேர் ஏறி, கலங்கு கடற் துவலே ஆழி கணேப்ப, இனிச் சென்றனனே, இடு மணற் சேர்ப்பன்; யாங்கு அறிந்தன்றுகொல் . தோழி! - என் தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே ?

-உலோச்சன்

362. மாரியும் மனக் கவலையும்

மாரிக் காலம் வந்தது. ‘கால மாரி’ என்றாள் அவள். ‘இல்லை. வம்பு மாரி” என்றாள் தோழி.