பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 கு று ங் ெத ைக க்

ஓங்கு வரல் விரிதிரை களையும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே ?

தும்பிசேர்கீரன்

38. இனி அவன் விருப்பம்

நெய்தல் நிலம். சுரு மீன்கள் மிகுதியாக உள்ள பகுதி. புன்னே யும் ஞாழலும் மலர் பரவி வெறியாடும் களம்போல் தோற்றமளிக் கச் செய்கின்றன. இத்தகைய இயற்கை வளம் நிரம்பிய இடத் தில் வாழும் செல்வன். ஒருத்திமீது காதல் கொண்டான். இன் பம் துய்த்தான். ‘பிரியேன்” என்று வாக்கு அளித்தான். நாட் கள் பல சென்றன. ஒருநாள் அவள் கூறினுள் :

“நான் வருந்துகிறேன். மெலிந்து போகிறேன். இனி, மணப் பதும் மணவாதிருப்பதும் அவன் விருப்பம். பிரியேன்” என்றான். நம்பினேன். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொறுப்பு அவனுடையது” என்றாள் அவள்.

எறி சுருக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின், நறு வீ ஞாழலொடு புன்னே தாஅய், வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் குறியான் ஆயினும், குறிப்பினும், பிறிது ஒன்று அறியாற்கு உரைப்பலோ, யானே ? எய்த்த இப் பணை எழில் மென் தோள் அணை இய அந் நாள் பிழையா வஞ்சினம் செய்த களவனும், கடவனும், புணைவனும், தானே.

-அம்மூவன்

386, வலை வீச்சும் வம்புப் பேச்சும்

கடல் காடு. கடலிலே சென்று பரதவர் கொண்டுவந்த மீனே உலர்த்தியிருக்கின்றனர் மணல் வெளியிலே. எங்கும் ஒரே மீன் காற்றம். காறினல் என்ன ? செல்வம் அது தானே. கடல் தந்த செல்வம். அத்தகைய செல்வன் ஒருவன். ஒருத்தியின்பால்