பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 349

காதல் கொண்டான். இன்பமாகப் பொழுது போயிற்று. ஊரிலே வம்பு பரவலாயிற்று. அப்போது அவள் கூறுகிருள் :

“அவருடன் ஒருநாள் கூட இன்பமாக இருக்கவில்லே. அதற் குள்ளே இந்த ஊரார் வம்பு அளக்கின்றனர். அப்பா! கொடிய வர். கடற்கரையிலே மீன் காற்றம் பரவியதுபோல் வம்பு பரவுகிறதே’ என்றாள்.

பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின் இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு, நிலவு நிற வெண் மணல் புலவ, பலவுடன், எக்கர்தொறும் பரிக்கும் துறைவனெடு, ஒரு நாள், நக்கதோர் பழியும் இலமே ; போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னேஅம் சேரி இவ் ஊர் கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.

-தும்பிசேர்கீரன்

387. கழி யு ம் காதலும்

நெய்தல் கிலத்திலே பெரியதொரு உப்பங்கழி. கழியின் இரு மருங்கும் சிறுகுடிகள்.

அக்கரையில் இருக்கிருன் காதலன். இக்கரையில் இருக்கி ருள் காதலி. இரவிலே கழியிலே இறங்கி நீந்தி வருகிருன் அவன்.

எதற்கு ? காதலியிடம் இன்பம் துய்ப்பதற்கு, கழியோ சாதா ரணமானது அன்று. பெரிய பெரிய முதலைகள் வசிப்பது. இந் கிலேயில் தோழி சொல்கிருள் :

“ஒருத்திக்கு இரட்டைப் பிள்ளைகள். இரண்டும் நஞ்சுண் டன. தாய் என்ன செய்வாள்? அந்த மாதிரி அவதிப்படுகிறேன்’ என்றாள்.

‘ஏன் ?’ என்று கேட்டான் அவன். “நீ வந்தாலும் கஷ்டம் , வராவிட்டாலும் கஷ்டம்’ ‘அப்படி என்ன ?”