பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 955

‘அவர் வரட்டும் இங்கே. நான் என்ன கேட்கிறேன் பார்’

‘என்ன கேட்பாய்?’’

‘அழித்த உனது அழகைத் தந்து போ என்று கேட்பேன்!”

‘சி அந்த மாதிரி கேளாதே. பாவம், அவர் வந்து நமது அழகிலே மயங்கி யாசித்தார் கொடுத்தோம். யாசித்த பொருளைத் திருப்பிக் கொடு என்று கேட்பதை விட உயிரை விடுவதே நன்று.”

அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி, தடக் தாள் காரை இருக்கும் எக்கர்த் தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம் கொள்வாம்’ என்றி - தோழி! - கொள்வாம்; இடுக்கண் அஞ்சி இரங்தோர் வேண்டிய கொடுத்து அவை தா எனக் கூறலின், இன்னதோ, கம் இன் உயிர் இழப்பே?

-சாத்தன்

396 மகிழ்ச்சி தரும் செய்தி

“அடியே 1 மகிழ்ச்சியான செய்தி!’

‘என்ன அது ?’’

‘உன்னைப் பெண் கேட்க வந்தனர்”

‘என்ன ஆயிற்று ?”

பெற்றாேர் என்ன சொல்வாரோ என்று பயந்தேன்’

உம்’

சரி” என்றனர்; சம்மதித்தனர்.”

“இனிமேல் இந்த ஊரார் முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்?’

ஏன் g

‘வம்பு அளந்தார்களே !’ வளையோய் உவந்திசின் - விரைவுறு கொடுங் தாள் அளே வாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென