பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 கு று க் .ெ த ைகக்

குடவாயில் கீரத்தனர்

குடவாயில் என்பது ஒர் ஊர்; சோழ நாட்டில் உள்ளது. சோழர் தம் தலைநகராக இருந்தது. பாடல் பெற்ற உண்ர். இவ்வூரினர் இப் புலவர். குப்பைக் கோழியார்

கோழிச் சண்டை பற்றிப் பாடியிருக்கிறார் இவர். குப் பைக் கோழிகளின் சண்டையையும், சண்டைக் கோழி களின் சண்டையையும் ஒப்பிடுகிறார். எனவே குப்பைக் கோழியார் எனும் பெயர் பெற்றார் இவர்.

குறுங் கீரஞர்

கீரனர் என்பது இவரது பெயர். பார்வைக்கு மிகவும் குள்ளமாக இருந்ததால் குறுங்கீரன் என்று பெயர் பெற் ருர், குறுங்கீரனர் என்றால் குள்ளக்கீரன் என்று பொருள்.

குறுங்குடி மருதனா

குறுங்குடி என்பது பாண்டி காட்டில் உள்ளதோர் ஊர். இந்த ஊரைச் சேர்ந்தவர் இவர். எனவே, குறுங்குடி மருதன் என்று அழைக்கப் பெற்றார்.

கூடலூர் கிழார்

கூடலூரைச் சேர்ந்தவர்; வேளாள வகுப்பினர். கணி தத்திலே மிக வல்லவர். சேரல் இரும் பொறை எனும் சேர அரசனுக்கு ஜோசியம் கூறினர். அதாவது அவன் எப்போது இறப்பான் என்று. புலவர் குறித்த காளில் அரசன் இறந்தான்.

கொல்லன் அழிசி

அழிசி என்பது இவரது இயற் பெயர். கொல்லன் என்பது தொழிற் பெயர். கொல்லர் வகுப்பினர் இப் புலவர்.