பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 77

இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொள்பவள். செவிலித் தாய்க்கு ஒரு மகளும் இருப்பாள். இந்த இளம் பெண்கள் இரு வரும் இணைபிரியாது வாழ்வார்கள். இவர்களுக்குத் தோழி என்றும் த லேவி என்றும் பெயர் வழங்குவார்கள்.

தலைவி என்பவள்தான் செல்வக் குடி மங்கை. செவிலித் தாயின் மகள் அவளது தோழி. தலைவியைப் பார்த்துக் காதல் கொண்டானே, அவனத் தலைவன் என்று அழைபபது வழக்கம்.

தலைவனும் தலைவியும் தனியிடத்திலே சந்திக்கத் துடிப்பார் கள். சக்திப்பு இயற்கையாகவே கேர்வதும் உண்டு ; கேரா திருப்பதும் உண்டு.

நேருங்கால் என் குைம்? இளம் உள்ளங்கள் இரண்டும் ஒன்றாகும்; இன்பம் துய்க்கும். பின்னே இருவரும் பிரிவர். இவ்விதம் தனிமையில் சந்தித்த செய்தியை எவரும் வெளியிடார். இதற்குத்தான் களவு என்று பெயர். திருட்டுத்தனமாக சக்தித் தது அல்லவா ? எவர்க்கும் தெரியாத செய்தி அல்லவா ? ஒளித்த செய்தி என்றும் சொல்வதுண்டு.

ருசி கண்ட பூனே சும்மா இருக்குமா ? இராது. உறியை உறியைத் தாவும். அந்த மாதிரிதான் இந்த இருவர் கிலேயும்.

ஒருமுறை சந்தித்த பிறகு அவ்வளவில் நின்றுவிடுவார்களா? மீண்டும் மீண்டும் சந்திக்க முயல்வர். அடிக்கடி தனிமையில் காண முடியுமா ? முடியாது.

எனவே, உதவியை நாடுவது வழக்கம். எவரது உதவியை? தோழியின் உதவியை. ஏன் ? அவள் தானே எப்போதும் தலைவி யுடன் இருக்கிருள். நீங்காது கிழல்போல் இருக்கிருள். அவளுக் குத் தெரியாமல் என்ன நடக்கும் ? எனவே, தலைவன் என்ன செய்வான் : மெதுவாகத் தோழியிடம் சொல்லுவான். தனது கருத்தை வெளியிடுவான்,

முன்பு நடந்தது அவளுக்குத் தெரியாமலா இருக்கும் ? தெரிந்திருக்கும். இருந்தாலும் அவள் என்ன செய்வாள் ஒன்றும் அறியாதவள் போலவே நடந்துகொள்வாள்.