பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 385

படாமலே கலியாணம் நடந்து விடும். இதைத்தான் மிகச் சிறப் பாகச் சொல்வார்கள்.

இவை யெல்லாம் எப்படி என்றால் காதலனும் காதலியும் மனம் ஒன்றி ஈடுபட்ட காரியங்கள்.

வற்புறுத்தும் காதலும் உண்டு. அதாவது என்ன? தாகை கனியாத பழத்தைத் தடி கொண்டு அடிப்பது என்று சொல் வார்களே அந்த மாதிரியானது. அது எப்படி?

ஒருவன் ஒருத்தி மீது காதல் கொள்வான். களவு ஒழுக் கத்துக்கு.அழைப்பான். அவள் இணங்க மாட்டாள். அப்போது அவன் என்ன செய்வான்? மடல் ஏறுவான்.

மடல் ஏறலாவது என்ன? பனங் கருக்கினலே குதிரை ஒன்று செய்வான். அதற்கு எருக்கம்பூ மாலையைச் சூடுவான். அதள் மீது ஏறிக்கொன்வான். குதிரையை இழுத்துக்கொண்டு வந்து ஊர்ப் பொதுவிலே முச் சந்தியிலே விடச் சொல்வான்.

முச்சந்தியிலே அந்தக்குதிரை மீது அமர்ந்து இருப்பான். அவன் கையிலே படம் ஒன்றிருக்கும். என்ன படம்? அவனது காதலியின் படம். அதையே பார்த்துக்கொண்டு பட்டினி கிடப் பான்

இந்த மாதிரி ஒருவன் சண்டித்தனம் செய்தால் ஊரிலே உள்ளவர்கள் சும்மா இருப்பார்களா? மாட்டார்கள்.

“ஐயோ பாவம்! போல்ை போகிருன். அவன் விரும்பும் பெண்ணே அடையட்டுமே” என்று சொல்லிப் பெண்ணே அவனிடம் அனுப்பி விடுவார்கள்.

இது சாதாரணமாக நடக்கிற காரிய்மல்ல. ரொம்பப் பிடிவாத குணம் படைத்தவர்கள் செய்கிற ராட்சத வேலை. பலர் பார்த்து நகைப்பதும் உண்டு. எல்லாருமே இதில் ஈடுபடமாட் டார்.

செல்வர் ஒருவர் வீட்டிலே ஒரு பெண் பிறக்கிருள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவர்கள் என்ன செய் வார்கள்? தொழுவத்திலே உள்ள காளேக் கன்றுகளில் ஒன்றை யும் தனியாக வளர்ப்பார்கள்: செல்வமாக வளர்ப்பார்கள்.

35