பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீயே உணர்ந்து கொள்வாய், தோழி நெல்லிக்கனி, தின்னுங் கால் துவர் மிகுந்து, தின்பதற்கு விரும்பாது போயினும், அதைத் தின்று பின்னர்க் குடிக்கும் நீர், பெரிஞ் சுவை பயத்தலை உணtவை. ஊரார் அலர் கூறச், சேரியார் சினக் கத் தாய் வருந்தப் பிரிந்து வந்த நம் செயல், நாம் விரும்பும் மணத்தைக் கொடுத்துப் பேரின்பம் அளித்தது என்:தை அப்போது உணர்ந்து மகிழ்வை. ஆகவே, அவளுேடு போவதற்கு இசைந்து, அதற்காவனவற்றை விரைந்து மேற் கொள்வோம் வா’ எனக் கூறி, அவள் கைகளைப்பற்றி அழைத்துச் சென்றாள்: -

“ஊர் அலர் எழச், சேரி கல்லென, ஆனது அலைக்கும் அறன் இல் அன்னை தானே இருக்கத் தன் மனை யானே, நெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசிளுல் அவரோடு செய்நாட்டு விண்தொட கிவந்த விலங்கு மலைக் கவாஅன் கரும்பு நடு பாத்தி அன்ன - பெருங்களிற்று அடிவழி நிலைஇய நீரே” !

அந்தோ தானே! நீ அளியை:

“ஊரையும், உற்றாரையும் விட்டு, உன் காத G? ‘: - விடு; அது ஒன்றே உய்யும் வழி’ எனத் தோழி கூறக்கேட்ட

குறுந்தொகை: 262. பாலை பாடிய பெருங் கடுங்கோ, - - - - கல்லென-ஆரவாரிக்க; ஆனது.ஒயாது; தன்மனையான் தானே இருக்க என மாற்றுக, முள எயிறு.முள்போல் கூறிய பற்கள் தயங்க.விளங்க ஆய்ந்திசின்-ஆராய்ந்து முடிவுசெய் தேன். எயிறு தயங்க, நீர் உணல் ஆய்ந்திசின் என மாற்றுக. விலங்குமலைக்கவாஅன்.குறுக்கே நிற்கும் மலையின் அடிவாரத் தில் நிவந்த-உயர்ந்த, . . . . . .