பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xf

கியம் எழ வழி வகுத்தார்கள். இவ்விரு முறையிலும், எது சிறந்தது என்பது பற்றி, இக்காலப் பேராசிரியர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதை யானும் அறிவேன்.

தனித் தனியே பாடி மகிழ்ந்த காலம் முற்பட்டது; கோவை எழுந்த காலம் பிற்பட்டது; தனி நிலையில் வைத்துப் பாடுவதிலும், கோவையாக வைத்துப் பாடுவதில் ஓரின்பம் இருந்ததினலேயே பிற்காலப் புலவர்கள், கோவை பாடும் வழக்கத்தை மேற் கொண்டிருத்தல் வேண்டும் என்பதே என் சருத்து. கோவை முற்பட்டதாகி, தனிநிலைப் பாடல் பிற் பட்டதாயின், முன்னதிலும், பின்னதிலேயே பேரின்பம் கண் டார்கள் புலவர்கள் என்று கொள்ளலாம்; அங்ஙனம் இல்லை! மேலும் அந்நிகழ்ச்சிகளே நிரல்படப் பாடிக் காட்டுவதில், கதைப் போக்கு அமையக் காண்கிருேம்; கதையில் ஆர்வம் காட்டுவது, மக்கள் மனத்தின் இயல்பாகும். ஆகவே, கோவை பாடும் முறை பெரிதும் விரும்பத் தக்கதாம்; இந்த உணர்வுடையேன் ஆதலின், வாழ்க்கையின் பல்வேறு பட்ட நிலைகளைத் தொடர்பற்ற வகையில் தனித் தனியான நிலையில், புலவர் பாடிச் சென்ற பாக்களின் தொகுப்பாகிய குறுந்தொகையிலும் ஒரு கோவை காண விரும்பினேன்; அதல்ை முன்னும் பின்னுமாகச் சிதறுண்டு கிடந்த பாக்களை, இயன்ற வகையில், நிகழ்ச்சியால் ஒருமைப்பாடு தோன்றும் வகையில் வரிசை செய்து, குறுந்தொகைக் கோவை எனும் பெயர் சூட்டியுள்ளேன்: பெரு மக்கள் ஏற்றுப் போற்றுவார் #6ffff” s a

கா. கோவிந்தன்