பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 i

ஒருவர், தம் இன்பத்தைக் குறைத்துக் கொள்ளவும் முன் வருவர்.

புகழ் பல வகையால் வரும் என்றாலும், அவற்றுள் வறி யார்ச்கு வழங்கி வாழ்வதால் பெறலாகும் புகழே சாலச் சிறந்தது. ஈதல்; இசைபட வாழ்தல்; அது வல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு” என, ஈகை அளிக்கும் புகழையே புகழ் எனப் பாராட்டியுள்ளார் வள்ளுவப் பெருந்தகையார். ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரும் இடையரு இன்ப வாழ்வினராதலும் வேண்டும்; இறந்தும் இறவாப் பெருநிை பெறத் துணிபுரியும் புகழ் அளிக்கும் பெருங் கொடையாள ராக வாழ்தலும் வேண்டும். அவ்வாழ்வு பெரும் பொருள் உடையார்க்கு மட்டுமே உண்டாம்; வறியார்க்கு அது வாய்க் காது. ஆகவே, அப்பொருளீட்டிவர இன்றே போதல் வேண்டும் எனத் துணிந்தான்; துணிந்து போதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தலைப்பட்டான்.

கடமை யுணர்வு வரப்பெற்ற அவன், காத ைவெறுக்கும் முதுமை வந்தடையப் பெற்றவனல்லன்; காதல் உணர்வு, அவன் உள்ளத்தில் பசுமையோடிக் கிடந்தது; அண்மையில் மணங் கொண்ட அவன் மனைவி பேரழகு கொண்டு விளங்’ கிள்ை. களவுக் காலத்தில் காண்பதற்கும் அரியளாய அவள் அருகில் இடை பிரியாதிருந்து இன்பம் நுகர வேண்டும் என்ற வேட்கை, அவன் கடமை யுணர்வு கண்டு கலங்கிற்று. அவளை விட்டுப் பிரிதல் அவனுல் இயலாது; பொருள் தேடிப் போகா திருப்பதும் பொருந்தாது. அவளேயும் உடன்கொண்டு போக லாம் என்றால், அது உலகியல் அன்று உடன் கொண்டு சென்றால். எப்பொழுதும் அவள் நினைவு ஒன்றே முன்நிற்கும். சென்ற வினையில் சிந்தனை செல்லாது; ஆதலின், உடன் கொண்டுபோவது முறையும் அன்று; அதனால் விட்டுப் பிரிய வும் மனம் வாராது. உடன்கொண்டு செல்லவும் இயலாது நெடிது வருந்தின்ை. காதல், கடமை இரண்டையும் ஒப்ப மதித்து, இரண்டனுள் எதையும் கைவிடமாட்டாது கலங்