பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

கும் அவன், பொருள் இல்லாதவர்க்குப் பொருளிட்டும் முயற்சி இல்லாதவர்க்கு ஈத்துவர்க்கும் இன்பம் இல்லை என அறிந்து, அப் பொருளீட்டும் முயற்சியை நனிமிக மேற் கொண்டுள்ள என் நெஞ்சே! உன்னை ஒன்று கேட்கிறேன்; வினே மேற்கொண்டு செல்வழி, வழித் துணையாக அவளும் உடன் வருவளோ? அவள் வர அருள் புரிவாயோ? அல்லது என்னை மட்டும் தனித்துப் போக்குவையோ? அதை எனக்கு உரையாய்” எனத் தன் நெஞ்சோடு கூறுவான் போல் கூறி நெடுந்துயர் உற்றான்.

‘ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் செய்வினை கைம்மிக எண்ணுதி, அவ்வினைக்கு அம்மா அரிவையும் வருமோ? எம்மை உய்த்தியோ? உரைத்திசின் நெஞ்சே!” 2

அவள் கண்ணிர் என்னைத் தடுக்கிறதே!

காதல் இன்பம் கைகூடப் பெருதோ என்ற கலக் கதி தால் அவ்வாறு கூறி வருந்திகுனேனும், கடமை யுணர்வில் ஆழ்ந்து போன அவன் உள்ளுணர்வு, அவனைப் பொருள் தேடிப் போகத் துரத்திற்று. அவனும் போகத் துணிந்தான். துணித்தவன் தன் முடிவைக் காதலிக்கு உரைத்து, அவள் பால் விபட பெற்றுப் போக விரும்பினுன். அவள் பால் சென்றான்; வாழ்க்கைக்கு வேண்டும் பெரும் பொருள் பெற்று மனைவியோடு கூடி, அப்பொருளால் பெறும் பேரின்பம் நுகர் தலே வாழ்வின் பயனும்; அது, மக்கள் உயிர்க்கு மட்டுமே ஏற்புடைய தொன் றன்று; அதை அறிந்து, அதன் வழிச் செல்லும் விலங்குகளும் உள என்பதை அவளுக்கு உணர்த்தி

a குறுந்தொகை 63. உகாய்க்குடி கிழார். துய்த்தல்-இன்பம் நுகர்தல்; இல்லோர்-பொருள் இல்லா தவர், பொருள் ஈட்டும் முயற்சி இல்லாதவர்; கைம்மிகமிகவும் அதிகமாக, அம்மா அளிலை-அழகியமாமை நிறம் பொருந்திய அவள் உய்த்தியோ அனுப்புவாயோ,