பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1i

ஆல்ை, கணவன் பிரிந்து போகக் கருதியுள்ளான் என்பது அறிந்து கலங்கிக், கண்ணிர் சொரிந்து, கதறி அழு வாளிடத்தில், ‘கணவன் பொருள் தேடிப் போவது நன்றே; அவனைப் போக விடுத்து வருந்தாது வாழ்வதே உனக்கு மாண்பாம் எனக் கூறின் அவள் துயர் மேலும் அதிகமாம்; அதனால் அவள், உள்ளம் உடைந்து, உயிர் இழந்து போவள்: ஆகவே அந்நிலையில் அவளுக்கு அறிவுரை கூறல் ஆகாது; அவள் உள்ளம் விரும்பும் இனிய உரைகளை உரைத்து, அவை கேட்டு அது சிறிது சினம் ஆறியிருக்கும் சமயம் நோக்கியே உலகியல் நீதிகளை உரைத்தல் வேண்டும் எனும் மனவியல் அறிவும் வாய்த்திருந்தமையால், தோழி, தான் உரைக்கப் புகுந்த உண்மைகளே வெளிப்படையாக உரைக்க விரும்ப வில்லை. மேலால் நோக்குவார்க்கு, ஆறுதல் அளிப்பன போல் தோன்றி, ஊன்றி, உரைகளின் உட்புகுந்து நோக்குவார்க்கு, உரைக்க விரும்பும் உலகியல் உண்மைகள் புலனுகி அறிவூட்ட வல்ல உரைகளே, அவற்றைக் கேட்கும் அப்பெண், கேட்ட அளவில் உணர்ந்துகொள்ளாது போயினும், கேட்ட சிறிது பொழுதிற்கெல்லாம் அவள் சிந்தனையைச் செயலாற்றத் தூண்டும் வகையில் உரைக்கத் துணிந்தாள். *..

பெண்ணே! பொருள் தேடிவரும் கருத்துடையராய்க் கணவர் பிரிந்து போய்விடுவரோ, என்று எண்ணிக் கலங்கிக் கண்ணிரி விடாதே; அவர் போகார்; அவர் போகார் என நான் உரைக்கக் காரணங்கள் நிறைய உள; பெண்னே! ஆடி வரிக்கு உயிர், அவர் மேற்கொள்ள வேண்டிய கடமைகளே யாகும்; இதை வேறு யாரும் கூறவில்லை; அவரே கூறினா என்பது உண்மை; ஆனால், அவர் இவ்வாறு கூறியதனல், அவர் பிரிவது உறுதி என்று எண்ணிவிடாதே, ஆடவர்க்கு உயிர், என்றும் எக்காலத்தும் தம் கடனுற்றி நிற்பதே என்று கூறிய அவரே. வேறு ஒர் உண்மையையும் கூறியுள்ளார்; அதையும் நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்; மணந்து மனையற வாழ்வு மிக்க மனேவியாம் தகுதி பெற்ற மகளிர்க்கு