பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i4

உலகிய ைநோக்கின், அவன் செல்வதே சிறந்தது ஆயினும், அவ்விருவரின் இளமை யுணர்வுகளையும், அவன் கடந்து செல்லவேண்டிய காட்டு வழியின் இயல்பையும் நோக்கின், அவன் அப்போது செல்லாதிருத்தலே சாலச் சிறந்ததாம் என உணர்ந்தாள்; அதனல் அவனே அணுகி, தேலைவ! எல்லாம் உணர்ந்த பெரியோன் நீ; உனக்கு அறி வுரை கூற வல்லார் இவ்வுலகில் ஒருவரும் இலர்; ஆயினும் நான் ஒன்று கேட்கிறேன்; அதற்கு விடையளித்துப் பின்னர் விடைபெற்று வினேமேற் செல்வாயாக, தலைவ! இவளைப் பிரிந்து வினேமேற் செல்லும் நீ, நீ கடந்து செல்ல வேண்டிய காட்டு வழியின் இயல்பினே உணர்வையோ? ஒரு மலேப்பக மடமை புறம்தோன்ற நோக்குவதல்லது, உள்ளத்தே காதல் தோன்ற நோக்க அறியா இளமையுடைமையால், தன் முன் செழித்து வளர்ந்திருக்கும் அறுகம் புல்லே மேய்வதில் ஆர்வம் காட்டுவதல்லது, தன் அருகில் அழகிய காளை ஒன்று தன்னையே நோக்கி நிற்பதை உணராது மேய்ந்து திரிய, மக்கள், தம் முடிகளில், வளைத்து வனப்புறச் சூட்டிக்கொள் ளும் தலைமாலைபோல் தோற்றம் அளிக்கும் வளைந்த கோடு களைக் கொண்ட அழகிய அம்மலை நாட்டுக் காளை, அப்பசு வின்மீது காதல் கொண்டு, அக்காதல் மிகுதியால், அப்பசு காதல் உணர்வு பெருக் கன்னிப்பசு என்பதையும் அறிய மாட்டாது, தான் நிற்கும் உகாய்மரம் வெய்யிவின் வெப்பம் தணிக்கும் பெருநிழல் தாராதாகவும், அதன் புல்லிய நிழலில் நின்றவாறே, அப்பசுவை வைத்த கண் வாங்காது நோக்கி நிற்பது போலும் நிகழ்ச்சிகளை நிறையக் கொண்டது, நீ கடந்து செல்ல வேண்டிய அக்காட்டு வழி எனக் கூறக் கேட்டுளேன்; அன்ப! அக்காட்சிகளைக் காண நேரின், அதன் பின்னரும், அக்காட்டு வழியைக் கடத்தல் உன்னல் ஆகுமோ? -

அன்ப அம்மலைப்பசு, தன் காதற்காளை தன்னே விட்டுப்

பிரியாது வாழவேண்டும் எனும் காதல் உணர்வு அற்று, உணவுண்ணும் கடமையிலேயே கண்ணும் கருத்துமாய் உளது: