பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#45

தோழியின் இம்மனக் குறிப்பை, முகக் குறிப்பால் கண்டு கொண்ட அப்பெண் தோழியை அருகில் அழைத்து, தோழி! நம் நாட்டில், கொன்றை, பொன்னிறப் புதுமலர் களே மலர்ந்து காட்டுவது போலவே, நம் காதலர் போயிருக் கும் நாட்டிலும், கொன்றை பொன்னிற மலர்களைப் பூக்கும். அம்மலர்களை நம் காதலர் காண்பர்; ஆம்மலர்க் காட்சி, அவருக்கு மகிழ்ச்சியைத் தாராது; மாருக, அம்மலர்களின் பொல் விறம், கணவர் பிரிவால், காதலியர் மேனியில் படர்ந்து பாழ்விளைக்கும் பசலையை நினைவூட்டும்; அந் நினைவு வரப்பெற்ற பின்னர், அவர் ஒரு நாழிகையும் ஆங்கு நில்லார். மேலும், காயா மரங்களைக் காண்பர்; கார் காலம் தொடங்கு வதற்கு முன் கடுங்கோடையால் இ ைஉதிர்ந்து கவின் இழந்து காட்சி அளித்த அது, கார்காலத்துப் புதுமழை பெற் றதும் , நீலநிற மலர்களால் நிறைந்து, மயிலின் கழுத்துப் போல் மின்னும்; அக்காட்சியைக் காண்பர்; அது, தான் பிரிந்து வந்துவிட்டமையால், இன்பத்தை இழந்துவிட்ட அழகிழந்த நம் கோலத்தைக் காட்டி, அவரைக் கலங்கச் செய்யும்; உடனே விரைந் தோடிவந்து, தன் அன்பு மழையை ஆரப்பெய்து, நம்மை அழகின் திருவுருவாக ஆக்கத் துாண்டித் துரத்தும். அம்மட்டோ ஆங்கு, எங்குச் சென்றாலும், புல்மேயச் சென்றாலும், நீர் குடிக்கச் சென் முலும், காட்டிற்குச் சென்றாலும், கானுற்றிற்குச் சென் முலும்; உறங்கினும், ஒடினும் தம் பிணைகளை இமைப்பொழு தும் விட்டுப் பிரியாத கமைான் கூட்டங்களைக் காண்பரே யல்லது, பினே வருந்த அதைத் தனியே விடுத்துப் பிரிந்து வந்து அலேந்து திரியும் கலையினைக் காளுர்; உடனே, ஆறறிவு வாய்க்கப் பெருத, இவ்வேழை உயிர்கள் அறிந் திருக்கும், பிறிவறியா இப்பெருவாழ்வின் உண்மையை நான் அறியாது போனேனே, என்னே என் அறியாமை!’ என்று எண்ணித் தன் அறியாமைக்கு வருந்தி, அது துடைக்கத் துடித்தோடி வந்து சேர்வர்; ஆகவே, நம்மை அவருக்கு நினை வூட்டி ஈண்டுவரத் தூண்டும் நல்ல துணை ஆங்கு இல்லை என்று எண்ணுதே; அத்தகைய நல்ல துணைகள், ஒன்றல்ல, இரண்