பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t.

டல்ல; எண்ணிலாதன ஆங்கு உள; இவ்வுண்மையை நான் அறிந்துனேன் ஆதலின், அவர் விரைவில் வீடு திரும்புவர் என் பதில் எனக்கு மாரு நம்பிக்கை உளது’ என்று கூறி உறுதி யுடையாள்போல் நடிக்கும் தன் நாடகத்தை நன்கு நடத்தில் காட்டிஞள்.

“சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ, நம் போல் பசக்கும் காலைத், தம்போல் சிறுதலைப் பிணையில் தீர்ந்த நெறிக் கோட்டு இரலை மானையும் காண்பர் கொல் கமரே? புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ்சினை மென்மயில் எருத்தில் தோன்றும் கான வைப்பின் புன்புலத்தானே.” .

கடமையின் சிறப்பைக் களிற்றினிற் கண்டார்:

கணவன் நட்புக் குன்றது என்பதை என் உள்ளம் அறி யும்; அதல்ை என் உடல் பசந்து காட்டினும், என் உள்ளம் கவ ைகொள்ளாது” எனக் கூறித் தோழியின் கலையைப் போக்கிய அப்பெண்ணின் உள்ளத்தில் புதியதொரு கவ&ல புகுந்துகொண்டது; அவள் உள்ளத்தில் நிலைபெற்று நின்ற கணவன் நட்பின் பெருமை, அவன், அவள்பால் கொண்டுள்ள அன்பின் பெருமையை. காதற் சிறப்பை நினைவூட்டிவிட்டது; அந்நினைவு அவளைப் பெரிதும் அலைக்கழிக்கத் தொடங்கிற்று.

டி குறுந்தொகை 1 ஒளவையார்.

நாட்ட-நாட்டில் உள்ள அம். அழகிய; பசுவி-புதுமலர்; பசக்கும்.பொன்போல் மலரும்; பிணையில் தீர்ந்த-பெண் மானப் பிரிந்த கோட்டு.கொம்பினை உடைய, இரலை.ஆண் மான்; காண்பர் கொல்.காண்பரோ, கானர். புல்லென்உலர்ந்து போன பூக்கெழு.மலரால் நிறைந்த, சினை-கிளை; எருத்தில், கழுத்துப்போல், கானவைப்பு-காட்டிடம்; புன் புலம்-மழைவளம் அற்ற நிலம்: